RBI New Rule:வங்கியில் காசோலை செலுத்துவதற்கு முன்பு இதை கவனியுங்கள்! இல்லையெனில் உங்களுக்கு இழப்பு

RBI New Rule: வார விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி அல்லது அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும், உங்கள் காசோலை பரிவர்த்தனை செய்யப்படும். எனவே காசோலை வழங்குவதற்கு முன், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2021, 09:16 PM IST
  • 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை செய்யப்படும்.
  • வங்கியில் பணம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.
RBI New Rule:வங்கியில் காசோலை செலுத்துவதற்கு முன்பு இதை கவனியுங்கள்! இல்லையெனில் உங்களுக்கு இழப்பு title=

RBI New Rule: காசோலைகள் மூலம் பணம் செலுத்தும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1 ம் தேதி, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. மத்திய வங்கி இப்போது 24 மணி நேரமும் காசோலை பரிவரத்தனை வசதியை வழங்க முடிவு செய்துள்ளது. தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (National Automated Clearing House) வசதி, இந்த மாதத்திலிருந்து 24 மணி நேரமும் செயல்படும். 

இப்போது NACH வசதி நாள் முழுவதும் செயல்படும். இதனால் காசோலைகள் மூலம் பணம் செலுத்தும்போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இனி சரியான நேரத்தில் செக் கிளியரிங் செய்யப்படும் என்பதால், அது வார விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி அல்லது அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும், உங்கள் காசோலை பரிவர்த்தனை (Cheque Clearing) செய்யப்படும். எனவே காசோலை வழங்குவதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்கள் காசோலை பவுன்ஸ் ஆகிவிடும். இதனால் நீங்கள் அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.

NACH என்றால் என்ன?
NACH என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) நடத்தப்படும் மொத்தமாக பணம் செலுத்தும் முறை  ஆகும். இது ஈவுத்தொகை, வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாற்றங்களை எளிதாக்குகிறது. இது மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, கடன் தவணைகள், பரஸ்பர நிதிகளில் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கட்டணங்களைச் சேகரிக்க உதவுகிறது.

ALSO READ | NACH system: ஞாயிற்றுக்கிழமை, வங்கி விடுமுறையிலும் சம்பளம் ஓய்வூதியம் கொடுக்கப்படும்!

அதிக அளவு காசோலை பயன்பாட்டுக்கு புதிய கட்டண விதிகள்:
காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி (RBI), இந்த ஆண்டு ஜனவரியில் காசோலைகளை செலுத்துவதற்கு "நேர்மறை ஊதிய முறை" ஒன்றை அறிமுகப்படுத்தியது. 50,000-க்கு மேல் பணம் செலுத்துவதற்கான விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். இந்த செயல்முறையின் கீழ்,  காசோலையை வழங்குபவர் காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை SMS, மொபைல் செயலி, இணைய வங்கி அல்லது ATM போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்க முடியும்.

ALSO READ | ஜனவரி 1 முதல் காசோலை பணபரிவர்தனை முறையில் மாற்றம் - இதோ முழு விவரம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News