வீடு வாடகைக்கு செல்லும் முன் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

Rental house Tips : ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கிறீர்கள் என்றால், அதற்கு முன் சில அடிப்படையான விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 30, 2024, 05:12 PM IST
  • வாடகை வீட்டுக்கு செல்கிறீர்களா?
  • முன்கூட்டியே கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  • இவையெல்லாம் பிரச்சனையை ஏற்படுத்தும்
வீடு வாடகைக்கு செல்லும் முன் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..! title=

வேலை, படிப்பு மற்றும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளியில் செல்பவர்கள் வாடகை வீட்டில் தங்க திட்டமிடுவார்கள். அப்போது சில அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டு எந்தவொரு வீட்டுக்கும் வாடகைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு சென்ற இடத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். அது மன உளைச்சலைக் கொடுப்பதும் மட்டுமின்றி, உங்கள் பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கலாம். 

வாடகை வீட்டுக்கு செல்லும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் : 

1. வாடகை ஒப்பந்தம் 

பெரும்பாலானோர் வாடகை ஒப்பந்தத்தை படிக்காமலேயே கையெழுத்திட்டுவிட்டு. பின்னர் சில விஷயங்களில் வீட்டு உரிமையாளர் கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, ​​பிரச்னைகளை சந்திக்கின்றனர். எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க சிறிது நேரம் ஒதுக்கி வாடகை ஒப்பந்தத்தை படிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக எத்தனை மாதங்களுக்குப் பிறகு வாடகை அதிகரிக்கப்படும், எவ்வளவு செக்யூரிட்டி பணம் செலுத்த வேண்டும், வீட்டை விட்டு வெளியேறும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் உள்ளது என்பதை கவனமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…

2. தனியுரிமை

இது இரண்டாவது மிக முக்கியமான விஷயம். வீட்டு வாடகைக்கு இருப்பவர்களின் தனியுரிமையில் பல சமயங்களில் வீட்டு உரிமையாளர்கள் தலையிடுவது தலைவலியாக மாறுகிறது. எனவே இந்த விஷயங்களை எல்லாம் முன்கூட்டியே தெளிவாக பேசிக் கொள்ளவும். அதனால் பின்னர் எந்த குழப்பமும் ஏற்படாது. இல்லையென்றால் இதுவே பெரிய பிரச்சனையாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

3. வீட்டு வசதிகள்

வாடகைக்கு அறை எடுக்கும்போது, மின்விசிறி இருக்கிறதா, இல்லையா, ஏசி, குளிரூட்டிக்கான ஏற்பாடு என்ன, மின்சாரத்துடன் தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டுமா, இவை அனைத்தையும் தெளிவாகக் கேளுங்கள். நீங்கள் ஒரு ஃபர்னிஷ் செய்யப்பட்ட வீட்டை வாங்குகிறீர்கள் என்றால், அங்கு இருக்கும் பொருட்களின் நிலை என்ன?, அவை நன்றாக இருக்கிறதா இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவற்றுக்கு ஆகும் செலவு குறித்தும் தெளிவாக ஆரம்பத்திலேயே பேசிக் கொள்ளவும்.

4. கரண்ட் பில், தண்ணீர் பில்

வாடகை வீட்டுக்கு செல்லும்போது உங்களுக்கு என மின்சார உபயோகத்துக்கு தனி மீட்டர் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். கரண்ட் பில் கட்டும்போது தனியாக கட்டிக் கொள்ளலாமா? அல்லது வீட்டு உரிமையாளரிடம் கொடுக்க வேண்டுமா என்பதை பேசிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் பிரச்சனைக்குரிய விஷயங்கள். இதில் தெளிவாக இருந்தால் வாடகை வீட்டுக்கு செல்லும்போது எந்த பிரச்சனையும் வராது. 

மேலும் படிக்க | நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News