Viral Pic: ரவிவர்மாவின் ஓவியங்களாய் மாறிய பிரபல நடிகைகள்..!

நடிகைகள் மத்தியில் பிரபலமாகும் ரவிவர்மாவின் ஓவியம்... இணையத்தை கலக்கும் புகைபடங்கள்!!

Written by - Devaki J | Last Updated : Feb 4, 2020, 02:11 PM IST
Viral Pic: ரவிவர்மாவின் ஓவியங்களாய் மாறிய பிரபல நடிகைகள்..!

நடிகைகள் மத்தியில் பிரபலமாகும் ரவிவர்மாவின் ஓவியம்... இணையத்தை கலக்கும் புகைபடங்கள்!!

நமது மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பது தான் ஓவியம். ஒருவனின் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை நாம் வார்த்தைகளால் கூறுவதை விட எளிமையானது ஓவியம். நாம் ஒரு ஓவியத்தின் மூலம் மற்றவர்களுக்கு சொல்ல நினைக்கும் கருத்துக்களை வெளிப்படையாக எளிதில் வரைந்து புரிய வைக்க முடியும் என்பது தான் ஓவியத்திற்கு உண்டான தனி சிறப்பு. 

ஓவியம் என்றாலே உடனே நமது நினைவில் வந்து நிற்பது ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் தான் என்பதற்க்கு மறு வார்த்தை இல்லை. ரவிவர்மாவின் ஓவியங்கள் அனைத்தும் உயிர் பெற்று புகைப்படங்களானால் எப்படி இருக்கும் என்பதை பிரபலமான போட்டோகிராபர் வெங்கட்ராம் காட்டியுள்ளார். பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த சில ஓவியங்களை, அப்படியே நடிகைகளை வைத்து புகைப்படங்களாக போட்டோ ஷுட் ஒன்றை அவர் எடுத்துள்ளார். ஆடை, அணிகலன், அலங்காரம், பாவனை என அனைத்தும் அப்படியே அந்த ஓவியங்களை அச்செடுத்தது போன்ற தோற்றத்தில் பிரபல முன்னணி நடிகைகளை வைத்து அவர் படம் பிடித்திருக்கிறார்.

இதில், சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸி பிரியதர்ஷன், லக்ஷ்மி மஞ்சு, ஷோபனா, நதியா ஆகியோர் ஓவிய புகைப்படங்களில் மிக அழகாக போஸ் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்கள். ஓவியங்களில் உள்ள முகத் தோற்றத்திற்குப் பொருத்தமான நடிகைகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் 2020 நாட்காட்டிக்காக இந்த புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். இந்த அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Very thankful for this body of work @suhasinihasan m’am @venketramg n my papa @shrutzhaasan #gvenketramphotography #naam #stylist #fashionstylist

A post shared by Amritharam (@amritha.ram) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Tomorrow Unveiling time

A post shared by Suhasini Hasan (@suhasinihasan) on

 

More Stories

Trending News