இந்தியன் ரயில்வேயின் முக்கிய விதிகள்: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும். அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும்.
இந்நிலையில் தற்போது நாம் இந்திய ரயில்வேயின் (INDIAN RAILWAY RULES) ஒரு முக்கியமான விதியை பற்றி காணப் போகிறோம். இதன் மூலம் நீங்கள் விரும்பிய இருக் கையை எளிதாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி பெரும்பாலானோர் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இருக்கையை தேர்வு செய்யும் விருப்பத்தை இந்திய ரயில்வே வழங்குவதாக கருதுகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை, ஏனெனில் இந்திய ரயில்வே அனைத்து பயணிகளுக்கும் இந்த வசதியை வழங்கி வருகிறது. எனவே உங்களுக்கு பிடித்த இருக்கையை எப்படி எளிதாக பெறுவது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
இருக்கை விருப்பத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
எனவே நீங்கள் விரும்பும் இருக்கையை பெற விரும்பினால், ஐஆர்சிடிசியின் (IRCTC - https://www.irctc.co.in/) அதிகாரப்பூவ இணையதளம் அல்லது இந்தியன் ரயில்வே ஆப்ஸ் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, இருக்கை முன்னுரிமையை பெறலாம். இருப்பினும், உங்களின் வயதுக்கு ஏற்ப மட்டுமே உங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும்.
இருக்கை ஒதுக்கீட்டில் இந்தியன் ரயில்வேவின் விதிகள்?
இந்தியன் ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், இரண்டு லோயர் பெர்த் இரண்டு மிடில் பெர்த், தர்ட் ஏசியில் இரண்டு இருக்கைகள், தர்ட் ஏசி எகானமியில் 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* இதில் கரிப் ரத் ரயிலில் இரண்டு கீழ் இருக்கைகளும், இரண்டு மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
* மூத்த குடிமக்களுக்கு (ஆண்கள் 60க்கு மேல், பெண்கள் 58க்கு மேல்) கேட்காமலேயே கீழ் பெர்த்களை வழங்குகிறது. அதன்படி ஸ்லீப்பர் வகுப்பில் ஆறு முதல் ஏழு லோயர் பெர்த்களும், தர்ட் ஏசியில் நான்கு முதல் ஐந்து லோயர் பெர்த்களும், செகண்ட் ஏசியில் மூன்று முதல் நான்கு லோயர் பெர்த்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
* கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரயிலில் லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கும் ரயிலில் லோயர் பெர்த் (Lower Birth) ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
எனவே இனி ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்வதற்கு முன்பாக, இதுபோன்ற விதிமுறைகள் பற்றி கட்டாயம் பயணிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ