நவராத்திரியின் ஒன்பாதவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை என்றும் சொல்லப்படும் இந்த பூஜையை பொதுவாக இரவு நேரத்தில் செய்வதே சிறந்தது. நவராத்திரியின் 8 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபட்டு அன்னையிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜையை செய்தால் பூர்த்தியடையும்.
மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக முப்பெரும் தேவியர்களும் ஒன்பது நாட்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஓருருவாய் உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர்.
இந்த போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போற்றும் வகையில் ஆயுத பூஜை என்ற பெயரில் நவராத்திரியின் ஒன்பதாவது நாள் கொண்டாடப்படுகிறது. இந்த போரில் வெற்றி பெற்ற நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
ALSO READ | தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருவதன் காரணம் இதுவே!
சரஸ்வதி பூஜையன்று வீட்டில் எப்படி வழிபடுவது என்பதை தெரிந்துக் கொள்வோம். வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் முன் பகுதியில் மாக்கோலம் போட்டு, வீட்டில் தோரணம் கட்டி பூஜையறையை அலங்கரித்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பூஜையை துவங்க வேண்டும். சாமி படங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து, பூப்போட வேண்டும். வாழையிலை போட்டு, அதில் அவல், பொரி, தேங்காய், வாழைப்பழம் போன்ற உணவு பொருட்களை வைக்கவும்.
அன்னை சரஸ்வதியின் படத்திற்கு அருகில் கல்வி மற்றும் இறை வழிபாடு சார்ந்த புத்தகங்களையும், தொழில் சார்ந்த கருவிகளையும் வைத்து, அனைத்திற்கும் சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.
ALSO READ | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்
பின் கடவுளுக்கு நைவேத்தியம் செய்து தூப தீபம் காட்டி அவரவர் வழக்கப்படி பாடல்களை பாடியும், மந்திரங்களை ஓதியும், கடவுள் பக்தி பாடல்களைப் பாடியும் அன்னையரிடம் நமது கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
பூஜையில் வைத்த புத்தகம் மற்றும் பேனா போன்ற பொருள்களை பூஜை முடிந்த உடனே எடுத்து பயன்படுத்த வேண்டும். சரஸ்வதி பூஜையன்று கற்பதற்கு உதவும் புத்தகம் மற்றும் பேனா போன்ற பொருள்களை பிறருக்கும் தானம் செய்ய வேண்டும். கல்வி தானம் பல தலைமுறைகளுக்கு பலன் தரும் தானம்.
நாம் பிறரிடம் இருந்து தானமாய் பெறுவது கல்வி தானம் என்பதை உணர்ந்து, பிரதி உபகாரமாக சிலருக்கு கல்வி கற்க உதவுவது அன்னை சரஸ்வதிக்கு நாம் செய்யும் உண்மையான பூஜையாக இருக்கும்.
ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR