Handbag: பொருத்தமான, சிறந்த கைப்பை வாங்க சில டிப்ஸ்..!!

பெண்களுக்கு கைப்பை (Handbag) என்பது உங்கள் இணை பிரியா நண்பராக இருக்கும் நிலையில், உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் வகையிலான சரியான ஹாண்ட்பேக்கை வாங்குவதற்கான டிப்ஸ் இதோ...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2022, 07:07 PM IST
Handbag: பொருத்தமான, சிறந்த கைப்பை வாங்க சில டிப்ஸ்..!! title=

ஒரு கைப்பை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்திருக்கும் பெண்களின் சிறந்த நண்பன் எனலாம். சந்தையில் ஏராளமான வகைகள் இருந்தாலும், உங்களுக்கான சரியான ஹாண்ட் பேக்கை வாங்க கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு கைப்பை (Handbag) என்பது உங்கள் இணை பிரியா நண்பராக இருக்கும் நிலையில், உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் வகையிலான சரியான ஹாண்ட்பேக்கை வாங்குவதற்கான டிப்ஸ் இதோ...

சரியான அளவு மற்றும் எடை

கைப்பையை வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் சரியான அளவு. உங்களுக்கு அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை என்றால், பெரிய கைப்பை தான் வேண்டும் என்று இல்லை,  அதிக பொருட்களை வைக்கு அளவிலான விசாலமான கைப்பையை வாங்கலாம். அதோடு, பையின் எடை உங்கள் கைகள் மற்றும் தோள்களில் அழுத்தம் மற்றும் வலியை கொடுக்காத அளவில் இருக்க வேண்டும்.

ALSO READ | தங்கம் மீதான முதலீடு பளபளப்பை இழந்ததா; ஆய்வு கூறுவது என்ன!

தரம்

நீங்கள் கொடுக்கும் விலைக்கான தரத்துடன்  உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட காலம் உழைக்கும் வகையிலான ஹாண்ட் பேக்குகள் சிறிது விலை கூடுதல் என்றாலும்  தயங்காமல் வாங்கலாம். ஏனென்றால் மலிவாக இருக்கிறதே என வாங்கினால், சிறிது நாட்களிலேயே, கைபிடி இணைப்பு, தையல்கள் பிரிந்து உபயோகம் அற்றதாகி விடும். ஹேண்ட்பேக்கின் கைப்பிடி உறுதியாக உள்ளதா என முதலில் கவனியுங்கள். 

பயன்படுத்தியுள்ள மெட்டீரியல் 

உங்கள் உபயோகத்தின் அடிப்படையில் கைப்பையின் எந்த மெட்டீரியலில் தேவை என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.  வேகன் லெதர் (Vegan leather ) பைகளுக்கு தற்போது சந்தையில் டிமாண்ட் உள்ளது. அசல் தோல் பைகளுடன் ஒப்பிடும்போது விலை குறைவாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. சில பிராண்டுகள் ஸ்டைலான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சணல் பைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ALSO READ | E-Passport: மைக்ரோசிப் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

கம்பார்மெண்டுகள்

கம்பார்மெண்டுகள் குறைவாக  உள்ள கைப்பைகள் எளிமையானதாகத் தோன்றினாலும், பல வகை பொருட்களை பிரித்து, தனித்தனியாக விக்க, அதிக கம்பார்மெண்டுகள் கொண்ட கைப்பைகள் ஒரு வரப்பிரசாதமாகும்.  உங்கள் பொருட்களை பிரித்து ஒழுங்காக வைத்தால், தேவைப்படும் நேரத்தில் அவற்றை எளிதாகக் கண்டறியலாம். இருப்பினும், இது தனிப்பட்ட்ட நபரின் விருப்பம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்தது.

நிறம்

கைப்பையின் நிறங்கள் உங்கள் ஆளுமையை வரையறுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை போன்ற நடுநிலை நிறங்கள், எந்த ஆடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும். முன்பு கறுப்பு மிகவும் விரும்பப்பட்ட வண்ணங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இப்போது, சிவப்பு, நீலம் போன்ற அடர் நிறங்களுடன், பல்வேறு வகையிலான லைட் நிறங்களும் வந்து விட்டன. இதனை உங்கள் விருப்படியும், பேஷனின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கலாம்.

விலை

விலை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான காரணியாகும். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு அதற்கு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும். தற்போதைய சந்தை விலையை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News