இந்தியாவில் மக்களின் தனிப்பட்ட அல்லது சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மத சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது, மதசார்பற்ற நாடாக விளங்கும் இந்தியா அதன் மக்களை அவர்களின் மத நம்பிக்கைகளைப் பின்பற்ற அனுமதிக்கிறது. இந்தியாவில் திருமணம், வாரிசுரிமை மற்றும் விவாகரத்து என்று வரும்போது வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியாக திருமண சட்டங்கள் உள்ளது, இப்போது அந்த சட்டங்களை பற்றி காண்போம்.
இந்து திருமணச் சட்டம் 1955:
இது இந்தியாவில் இந்துக்களின் திருமணம் மற்றும் விவாகரத்தை நிர்வகிக்கும் ஒரு முக்கியமான சட்டமாகும், இந்துக்களின் திருமணம் தொடர்பான பல முக்கிய விதிகளை இந்த சட்டம் வழங்குகிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று இது 'சபிண்டா உறவு' என்ற கருத்தை அங்கீகரிக்கிறது, அதாவது ஒரு குறிப்பிட்ட அளவிலான வம்சாவளியினருக்குள் ஒருவருக்கொருவர் தொடர்புடைய நபர்களிடையே திருமணங்களைத் தடை செய்கிறது. இந்து திருமணச் சட்டம், 1955, இந்தியாவில் இந்து திருமணங்களை நவீனமயமாக்குவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | பழைய டயர்களை கொண்ட வாகனங்களுக்கும் இனி அபராதம்!
சிறப்பு திருமணச் சட்டம் 1954:
இந்தச் சட்டம் வெவ்வேறு மதங்கள் அல்லது சமூகங்களைச் சேர்ந்த தம்பதிகளின் சிவில் திருமணங்களை அனுமதிக்கிறது. மதச்சார்பற்ற திருமணத்தை ஆதரிக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. தங்கள் சமூகத்தை விடுத்தது பிற சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைத்து மதத்தினருக்கும், மதச் சடங்குகளை செய்ய விரும்பாதவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். இந்த சட்டத்தின் மூலம் திருமணங்களை பதிவு செய்யவும், சான்றிதழ் வழங்கவும், திருமண பதிவுகளை பராமரிக்கவும் அரசால் நியமிக்கப்பட்ட திருமண அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. சரியான காரணம் இருந்தால் விண்ணப்பத்தை சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் யார் வேண்டுமானாலும் திருமணத்தை எதிர்க்கலாம்.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், 1872:
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களிடையே திருமணங்களை ஆதரிக்கும் வகையில் இந்த சட்டம் வரப்பட்டது, இந்த சட்டம் அனைத்து பிரிவுகளின் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். திருமணம் செய்துகொள்பவர்களின் வயது, ஒப்புதல் மற்றும் சாட்சிகளின் இருப்பு உள்ளிட்ட திருமணத்தை உறுதிப்படுத்துவதற்கான விதிகளை இந்த சட்டம் வகுக்கிறது. இந்த சட்டம் விவாகரத்து, நீதித்துறை பிரிப்பு அல்லது ரத்து செய்தல் மூலம் திருமண உறவை முறிக்கவும் உதவுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத போதகரோ அல்லது திருமணங்களை நடத்த உரிமம் பெற்ற வேறு எவரோ திருமணத்தை நடத்தலாம்.
முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937:
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்காக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் பராமரிப்பு உட்பட முஸ்லீம்களின் தனிப்பட்ட சட்டத்தின் அனைத்து விஷயங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். இது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய சட்டமான ஷரியத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குகிறது. திருமணம், விவாகரத்து மற்றும் பரம்பரை தொடர்பான விஷயங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகங்கள் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறலாம்.
மேலும் படிக்க | OPS vs NPS: அரசு எடுத்த பெரிய முடிவு, இரண்டு ஓய்வூதிய முறைகளில் எது சிறந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ