வேலை இல்லா பட்டதாரிகளுக்கு நல்லதொரு செய்தியாய் மோடி அரசின் அமைச்சகம் 16 கோடி மக்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி அரசாங்கத்தின் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறை வரும் சில ஆண்டுகளில் ஒரு பெரிய வேலைவாய்ப்புத் துறையாக வெளிவரப்போகிறது. MSME அமைச்சின் பொறுப்பை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறை ஐந்து கோடி புதிய வேலைகளை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்புகள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படும் என்றும், இது தவிர, MSME துறை சமீபத்தில் 11 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது எனவும் முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025-ஆம் ஆண்டளவில், 16 கோடி மக்களை புதிய வேலைகளுடன் இணைப்பதில் இந்த அமைச்சகம் வெற்றிபெறும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கொண்டு செல்வதற்கு பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள நிதின் கட்கரி, MSME துறை இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற தொழில்களின் ஆண்டு வருவாய் தற்போது 75 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டுக்கு இது ஒரு லட்சம் கோடியாய் உயர்த்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதேபோல், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருவாயை ஐந்து லட்சம் கோடியாக உயர்த்துவது மோடி அரசின் இலக்கு. ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி புதிய வேலைகளும் கிடைக்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.