புத்தாண்டில் பணப்பிரச்சனை இல்லாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

Purse Tips for New Year 2023: புத்தாண்டு முதல் நீங்கள் பணப்பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மட்டும் செய்தால் போதும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 10, 2022, 11:20 PM IST
புத்தாண்டில் பணப்பிரச்சனை இல்லாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் title=

Purse Tips: 2022 ஆம் ஆண்டில் இறுதி மாதத்தில் இருக்கிறோம். இன்னும் ஒருசில வாரங்களில் புத்தாண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். அந்த புதிய ஆண்டில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் பணமும் செல்வமும் எப்போதும் வாழ்க்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். அன்னை லட்சுமியின் அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். 

வெள்ளி நாணயம்

புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று லட்சுமி தேவியை வழிபடும் போது, ​​அவளுக்கு ஒரு வெள்ளி நாணயத்தை காணிக்கை செலுத்துங்கள். பின்னர் இந்த நாணயத்தை உங்கள் பணப்பையில் வைக்கவும். இதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் ஆண்டு முழுவதும் உங்கள் மீது இருக்கும். பணப்பையில் வெள்ளி நாணயங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வேறு எதுவும் இருக்கக்கூடாது.

மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

ஏலக்காய்

புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று லட்சுமி தேவியை வழிபடும்போது, ​​ஐந்து சிறிய ஏலக்காய்களை அவளுக்குப் படைக்கவும். இதற்குப் பிறகு, அனைத்து ஏலக்காய்களையும் சிவப்பு நிற பட்டுத் துணியில் கட்டி பர்ஸில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பர்ஸ் காலியாக இருக்காது.

அரசமர இலை

புத்தாண்டில், ஒரு அரச மர இலையை வைத்து, சுப வேளையில் நோட்டுகளுடன் சேர்த்து பணப்பையில் வைக்க வேண்டும். இதனால் நிதி நெருக்கடி நீங்கும். மறுபுறம், புத்தாண்டில், உங்கள் விருப்பங்களில் ஒன்றை சிவப்பு காகிதத்தில் எழுதி பட்டு நூலால் கட்டி உங்கள் பணப்பையில் வைக்கவும். இப்படி செய்தால் அந்த ஆசை வருடத்தில் நிறைவேறும்.

அரிசி

ஆண்டின் முதல் நாளில், லட்சுமியின் பாதத்தில் சில அரிசி தானியங்களை சமர்பிக்கவும், பின்னர் இந்த அரிசியை உங்கள் பணப்பையில் வைக்கவும். இதன் மூலம் உங்கள் பர்ஸ் ஆண்டு முழுவதும் பணம் நிறைந்திருக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால், மா லட்சுமிக்கு அளிக்கப்படும் அரிசியை உடைக்கக் கூடாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கிரெடிட் கார்ட், UPI பேமெண்ட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்: அதிகரித்தது வசதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News