உலக பணக்காரர்களின் பட்டியல்: 13ம் இடத்தில் முகேஷ் அம்பானி!

உலக பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 19வது இடத்திலிருந்த 13ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Updated: Mar 6, 2019, 12:58 PM IST
உலக பணக்காரர்களின் பட்டியல்: 13ம் இடத்தில் முகேஷ் அம்பானி!

உலக பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 19வது இடத்திலிருந்த 13ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பத்திரிகையான போர்பஸ், 2019ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 106 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான் அமேசானின் நிறுவனர் பெசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபேட்டைப் பின்னுக்குத் தள்ளி,  முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, 6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 36வது இடத்திலும், ஹெச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82வது இடத்திலும், ஆர்ச்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் 91வது இடத்திலும் உள்ளனர்.