Nostradamus புத்தாண்டு அதிகாரத்துக்கு உலை வைக்கும்! வேலைவாய்ப்பு குறையும்! அச்சமூட்டும் 2023 கணிப்புகள்

Nostradamus Predictions For 2023: 2023 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் புத்தாண்டிலும், உலகில் கவலைகளுக்கு பஞ்சம் இருக்காது என எச்சரிக்கின்றன

Last Updated : Dec 10, 2022, 12:46 PM IST
Nostradamus புத்தாண்டு அதிகாரத்துக்கு உலை வைக்கும்! வேலைவாய்ப்பு குறையும்! அச்சமூட்டும் 2023 கணிப்புகள் title=

2023 Nostradamus Predictions: பல பிரபலமான தீர்க்கதரிசிகள் 2023 ஆம் ஆண்டைப் பற்றி கணித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் புத்தாண்டிலும், உலகில் கவலைகளுக்கு பஞ்சம் இருக்காது என எச்சரிக்கின்றன. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.  2022ஆம் ஆண்டில் ரஷ்ய - உக்ரைன் போர் குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் உண்மையானதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
2022 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நாட்டிற்கும் உலகிற்கும் எப்படி இருக்கும்?

நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உலகின் சில தீர்க்கதரிசிகள் இதைப் பற்றி பல தசாப்தங்களுக்கு முன்னரே, 2023ம் ஆண்டுக்கான பலன்களை கணித்துள்ளனர். நாஸ்ட்ராடாமஸ் துல்லியமான கணிப்புகளுக்கு பிரபலமானவர். 2023ஆம் ஆண்டு அச்சமூட்டும் என உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான நோஸ்ட்ராடாமஸ் கணித்துளார். 2023 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம்.

இந்தப் போர் ஏழு மாதங்கள் நீடிக்கும் என்று அவர் கணித்துள்ளார். தீய செயல்களால் பலர் இறக்க நேரிடும் என்ற அவர் கணிப்பை, அது மூன்றாம் உலகப் போராக இருக்கலாம் என பலரும் கவலைகளை பகிர்ந்துக் கொள்கின்றனர்.

மேலும் படிக்க | 2023 ஜனவரி 17ம் தேதி சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளும் பரிகாரங்களும்

மோதல்கள் தொடரும்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. அதே நேரத்தில் தைவான் மற்றும் சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உக்ரைனுடன் இருக்கும் என்றால், சீனா, வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன. அதே நேரத்தில், பெலாரஸ் வெளிப்படையாக ரஷ்யாவிற்கு ஆதரவாக உள்ளது. இது மூன்றாம் உலகப் போர் தொடங்குவதற்குக் காரணமாக உருவாகும் என்று நம்பப்படுகிறது.

world

பொருளாதார நெருக்கடி

2023இல் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு முக்கிய காரணம் போர் மற்றும் பல காரணங்களாக இருக்கலாம். தற்போது, ​​பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது. பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு நீக்கியுள்ள நிலையில், பிறக்கவிருக்கும் புத்தாண்டில் வேலைக் குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும், பலருக்க்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் புத்தாண்டு கணிப்பில் நாஸ்ட்ராடாமஸ் தெரிவித்துள்ளார். இது பல தசாப்தங்கள் முன்பே 2023ம் ஆண்டிற்கு செய்யப்பட்ட கணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா?
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் 
2023 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒளி விழும் என்று பிரபல தீர்க்கதரிசியான நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்வதற்கான முன்னறிவிப்பாக மக்கள் இதை கருதுகின்றனர். நாசா உட்பட பல நாடுகள், செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடைய சில பெரிய விஷயங்கள் வெளிவரலாம் என்று நம்பப்படுகிறது.

 அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி
நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, சில இடங்களில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்படலாம்; ஒரு நாட்டின் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யலாம் என்பது முக்கியமானதாக  பார்க்கப்படுகிறது. தற்போது ஈரான் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேறு சில நாடுகளிலும் இதுபோன்று, அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடக்கலாம் என்று நம்பப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜீ தமிழ் நியூஸ் இந்தத் தகவல்களுக்கு பொறுப்பு ஏற்காது)

மேலும் படிக்க | Ezharai Sani: 2023 சனிப் பெயர்ச்சியால் ஏழரை நாட்டானால் துன்பப்படப்போகும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News