Palace on Wheels: ரயிலா இல்லை... 5 ஸ்டார் ஹோட்டலா... பயணம் மட்டுமல்ல... இனி திருமணமும் நடத்தலாம்..!!

நாம் அனைவரும் இரயில்களில் நிச்சயம் பயணித்திருப்போம்.  ரயில் சாமானியர்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதே சமயத்தில், சில ஆடம்பர ரயில் சேவைகளும் வழங்கபடுகின்றன. அதில் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 2, 2024, 06:47 AM IST
  • பேலஸ் ஆன் வீல்ஸ் என்பது ஒரு ஆடம்பர ரயிலாகும்.
  • அரண்மனை போல, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல தோற்றம் கொண்டது.
  • பேலஸ் ஆன் வீல்ஸில் திருமணத்தை நடத்த வசதியாக டிராவல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Palace on Wheels: ரயிலா இல்லை... 5 ஸ்டார் ஹோட்டலா... பயணம் மட்டுமல்ல... இனி  திருமணமும் நடத்தலாம்..!! title=

ஜெய்ப்பூர் நகரில் ராஜஸ்தானின் அழகும் வீரமும்  ஒவ்வொரு மூலையிலும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு நகரத்திற்கும் அதற்கென ஒரு அடையாளம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. இந்த இடத்தின் பெருமையும் வரலாற்று சிறப்பு அம்சங்களும் தனித்துவமானது. நாட்டின் இரண்டாவது மிக ஆடம்பர ரயிலான, பேலஸ் ஆன் வீல்ஸ், இந்த பிரமாண்டத்தை பிரதிபலிக்கிறது. இதில் உள்ள ஆடம்பர வசதிகள் பயணத்தின் இன்பத்தை பன்மடங்கு அதிகரிக்கின்றன. இதில், அனைவரும் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். அனைத்து வசதிகளுடன் மேலும் ஒரு புதிய வசதியும் இந்த ரயிலில் கிடைக்கப் போகிறது. இனி இந்த ரயிலில் பயணிகளும் திருமணம் செய்துகொள்ளலாம்.

பேலஸ் ஆன் வீல்ஸ் என்பது ஒரு ரயிலாகும். அரண்மனை போல, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல தோற்றம் கொண்டது.  அரண்மனை போன்ற இந்த ரயிலின் உட்புறம், உணவு மற்றும் வசதிகள் ஆகியவை இதன் சிறப்பு. இப்போது அனைவரது இதயத்திலும் இடம்பிடித்துள்ள ஆடம்பர ரயிலில் இனி திருமணமும் செய்து கொள்ளலாம். இப்போது ஆடம்பரமான இந்திய ரயில்வேயின் இந்த பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலில் திருமணங்கள் தொடர்பான அனைத்து சடங்குகளையும் ரயிலில் நடத்தும் வசதியை ஏற்படுத்த உள்ளது.

பேலஸ் ஆன் வீல்ஸில் திருமணத்தை நடத்த வசதியாக டிராவல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, பேலஸ் ஆன் வீல்ஸில் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த ரயிலின் புதிய சீசன் இந்த ஆண்டு ஜூலை 20 முதல் தொடங்கும். இன்றுவரை, இதியாவில் ரயிலில் திருமணம் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேலஸ் ஆன் வீல்ஸ் ராஜஸ்தானின் வரலாற்று மற்றும் சுற்றுலா இடங்களுக்கு சுற்றுப்பயணங்களை வழங்குகிறது. இதனுடன் ஆக்ராவும் அடங்கும். இந்த ரயில் ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர், சித்தோர்கர், உதய்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பரத்பூர் மற்றும் ஆக்ரா வழியாக டெல்லிக்கு திரும்புகிறது. 

மேலும் படிக்க | பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்..!!

லட்சம் ரூபாய் வாடகை

பேலஸ் ஆன் வீல்ஸ் இந்தியாவில் இயங்கும் இரண்டாவது மிக ஆடம்பர ரயில் ஆகும். மகாராஜா ரயிலுக்குப் பிறகு லட்சங்களில் கட்டணம் வசூலிக்கப்படும் மற்றொரு ரயில் இது.  இந்த ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரி கட்டணம் ரூ.1 லட்சம். நீண்ட தூர பயணங்களுக்கு, இந்த ரயிலின் கட்டணம், லட்ச ரூபாயை தாண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அல்லது பிரபல நபர்கள் மற்றும் வணிக நபர்கள் மட்டுமே இதில் பயணம் செய்கிறார்கள். இந்த ஆடம்பர ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் இந்த ரயிலில் விரைவில் திருமணங்கள் நடக்கவுள்ளன. ரயில்வே மற்றும் பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலில் திருமண வசதிகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும்.

மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News