திருமண பதிவுச் சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதியினருக்கு, திருமணப் பதிவு என்பது கட்டாயமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தம்பதியினர் எப்படி திருமணச் சான்றிதழைப் பெறலாம் என்பது குறித்து காண்போம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 9, 2023, 11:17 PM IST
  • ஆன்லைனில் திருமணச் சான்றிதழ்
  • வீட்டில் இருந்தபடியே பெற முடியும்
  • விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
திருமண பதிவுச் சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி? title=

திருமணச் சான்றிதழ் கட்டாயம்

2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ், திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி, விசா பெறுவது, பாஸ்போர்ட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, திருமணம் ஆன தம்பதிகள் கட்டாயம் திருமணத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும், முன்னதாகவே திருமணப் பதிவிற்கு, ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனுடனேயே, சிறப்புத் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்த சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே, திருமணத்திற்கான பதிவு நடைபெறும்.

திருமணம் பதிவு செய்வது எப்படி?

- தமிழ்நாடு அரசு, திருமணம் ஆன, தம்பதியர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவுக்கான வழிமுறை ஏற்பாடு செய்துள்ளது.

- முதலில், திருமணச் சான்றிதழ் பெறுவதற்கு அரசின் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்குச் சென்று “பதிவு செய்தல்” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

- அங்கீகரிக்கப்பட்ட முகவரி: https://tnreginet.gov.in/portal/

- பிறகு, அதில் பயனர் பதிவு அதாவது, அக்கவுண்டை உருவாக்க வேண்டும். அதில், பயனர் பெயர் மற்றும் அக்கவுண்ட் திறப்பதற்கான முக்கிய விவரங்கள், திருமணத் தம்பதிகளின் தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிட வேண்டும். அதில், பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஓடிபியை பதிவிட்டு அக்கவுண்டை உருவாக்கலாம்.

மேலும் படிக்க | Jobs Ready: வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் லட்சக்கணக்கான வேலை காலி

- இவ்வாறு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதே, அதில் கேட்கப்படும் ஆவணங்களை மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள வேண்டும்.

- இவ்வாறு விண்ணப்பித்த பிறகு, நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு, சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று பெறப்படும்.

- அதில், திருமணத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டும் நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

- இந்த குறிப்பிடப்பட்ட தேதியில், திருமணத்தின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

- அதன் பின், ஒரிஜினல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பதிவிடலாம். இவ்வாறு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லும் போது, சாட்சி கையொப்பத்திற்கு மூன்று நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

- மேலே கொடுக்கப்பட்ட முறைகளின் மூலம், திருமணத்தைப் பதிவு செய்து திருமணச் சான்றிதழைப் பெறலாம்.

மேலும் படிக்க | Whatsapp அட்டகாசமான புதிய அம்சம்: இனி இங்கும் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News