வெற்றியே தாரக மந்திரம் உழைப்பிலே முன்னேற துடிக்கும் கடும் உழைப்பாளி ராசிகள்

வெற்றி பெற வேண்டும் என்ற அதீத ஆர்வம் கொண்ட ராசிக்காரர்கள், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2022, 08:39 PM IST
  • வெற்றி மோகம் கொண்ட ராசிகள்
  • கடுமையான உழைப்பாளி ராசிகள்
  • உழைப்பாளி ராசிக்காரர்கள் இவை
வெற்றியே தாரக மந்திரம் உழைப்பிலே முன்னேற துடிக்கும் கடும் உழைப்பாளி ராசிகள் title=

புதுடெல்லி: மனிதர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு குணங்கள் மற்றும் இயல்புகள் சொல்லப்பட்டுள்ளன. சில ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கோ அதுவே வாழ்வின் உயிர்மூச்சாக இருக்கும்.

பிறக்கும்போதே வெற்றி பெறவேண்டும் என்ற துடிப்புடன் பிறக்கும்  சில ராசிக்காரர்கள், அதற்காக போட்டி போடுவதில் ருசி காண்பவர்கள். போட்டியாளர் இருந்தால் தான் உற்சாகமாக வேலை செய்யும் ராசிக்காரர்களும் உண்டு.

ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதுபோல இயல்பான குணமுடைய ராசியை சேர்ந்தவர்கள் யார்? நீங்களும் அதில் உண்டா? வெற்றியே வாழ்வின் இலட்சியம் என்ற வெறி இவர்களிடம் அதிகம் இருப்பதால், கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். 

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பின் ராசி மாறும் சனி பகவான்; இந்த ராசிகளுக்கு கவனம் தேவை

மேஷம்
மேஷத்தின் அதிபதி செவ்வாய் கிரகமாகும், இது கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறது. செவ்வாயின் தாக்கத்தால் வீரம் மிக்க குணங்கள் இந்த ராசிக்காரர்களிடம் இருக்கும். இவர்கள் தொடங்கும் வேலையை எப்படியும், எந்த விதமான வழிகளிலும் செய்து முடிப்பார்கள்.

வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும் வெறியும் மேஷ ராசிக்காரர்களிடம் உள்ளது. இருப்பினும், அவர்கள் விரும்பிய முடிவு கிடைக்காவிட்டால் ஏமாற்றமடைகிறார்கள், ஆனால் தைரியத்தை இழக்க மாட்டார்கள்.

ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற வெறி அவர்களிடம் உள்ளது. இயற்கையில் மிகவும் பிடிவாதமான  குணத்தைக் கொண்ட அவர், அவர்கள் ஈடுபடும் வேலையை, முடித்த பின்னரே மூச்சு விடுகிறார்கள். எவ்வளவு நேரம் போராட்டம் நடத்தினாலும் நேரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மேலும் படிக்க | புதனின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 24 வரை ராஜ யோகம் 

துலாம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள். எந்த வேலை செய்யும் போதும் எதிராளியை எப்படி தோற்கடிப்பது என்று யோசிப்பார்கள். இதற்காக அவர்கள் சில சமயங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தங்கள் இலக்கை அடைகிறார்கள்.

இருப்பினும், அவர்கள் தோற்கடிக்கப்படும்போது, ​​அவர்கள் கோபத்தில் தங்கள் சமநிலையை இழக்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மென்மையான இயல்புடையவர்கள், அதே போல் கடின உழைப்பாளிகள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் கடின உழைப்பால் அனைத்தையும் சாதிப்பார்கள். இருப்பினும், சில சமயங்களில் கடினமாக உழைக்கும் அவர்களின் பழக்கம் பலரை எதிரிகளாக ஆக்குகிறது.

அத்தகைய சூழ்நிலையில், சிலர் அவருக்கு போட்டியாளர்களாக மாறுகிறார்கள். அதன் காரணமாக அவர்கள் தங்கள் முழு பலத்தையும் வைத்து வெற்றி பெறுகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாயின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News