வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிக இருக்கும் 4 ராசிகள்..!!

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சிறப்பான குணங்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 7, 2022, 06:49 AM IST
  • கடினமான வேலை செய்யும் திறன் கொண்டவர்கள்
  • பெரிய உயரங்களை அடைய பாடுபடுவார்கள்.
  • வெற்றி பெறும் அதீத ஆர்வம்
வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிக இருக்கும் 4 ராசிகள்..!! title=

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சிறப்பான குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் இயல்பும் அவரவர் ராசியுடன் தொடர்புடையது. மேலும், ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். சில ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையும், சிலரிடம் நேர்மையும் அதிகமாக இருக்கும். இது தவிர, சில ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற அதீத ஆர்வம் இருக்கும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்
இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். அவர்கள் ஏதேனும் உடனடியாக என்ன முடிவெடுத்தாலும், அதை எல்லா வழிகளிலும் நிறைவேற்றுகிறார்கள். இந்த ராசியில் செவ்வாயின் தாக்கம் உள்ளது. செவ்வாயின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், அச்சமற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!

துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய ஆர்வத்துடன் கடுமையாக உழைக்கிறார்கள். இந்த குணங்களால் மக்கள் அவர்களை விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வித்தியாசமான உயரத்தை அடைவார்கள்.

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அச்சமற்றவர்களாகவும் தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்குள் நிறைந்துள்ளது. வாழ்க்கையில் பெரிய விஷயங்களை அடைவதே இவர்கள் முன்னுரிமை. இதனால்தான் அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று வெற்றி பெற போராடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நீண்ட தூரம் செல்கிறார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களிடம் சனியின் தாக்கம் அதிகம். மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கிறார்கள். இதனால், கடின உழைப்புக்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astrology: சுக்கிரன் பெயர்ச்சியினால் குபேரன் ஆகப் போகும் ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News