PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு, இன்று முதல் புது விதிமுறைகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் காசோலை செலுத்துவதற்கான சரிபார்ப்பு அவசியமாகிவிட்டது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2022, 06:34 AM IST
  • ஏப்ரல் 4 முதல் PNB விதி மாற்றம்
  • வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி
  • பாசிட்டிவ் பேமண்ட் முறை என்றால் என்ன
PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு, இன்று முதல் புது விதிமுறைகள் title=

ஏப்ரல் 4 முதல் பிஎன்பி விதி மாற்றம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதாவது பிஎன்பி இன்று முதல் பாசிட்டிவ் பேமண்ட் முறையை (பிபிஎஸ்) அமல்படுத்தியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில். பாசிட்டிவ் பேமண்ட் முறையை முறையை அமல்படுத்தப்படுகிறது. பல்வேறு வங்கிகள் ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தாலும் இன்று முதல் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தனது வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்., ஏப்ரல் 4, 2022 முதல் பாசிட்டிவ் பேமண்ட் முறை கட்டாயமாக்கப்படும். வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளை வங்கி கிளை அல்லது டிஜிட்டல் சேனல் மூலம் வழங்கினால், பிபிஎஸ் உறுதிப்படுத்தல் கட்டாயமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் கணக்கு எண், காசோலை எண், ஆல்பா காசோலை, காசோலை தேதி, காசோலைத் தொகை மற்றும் பயனாளியின் பெயரை வழங்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு பிஎன்பி வாடிக்கையாளர்கள் 1800-103-2222 அல்லது 1800-180-2222 என்ற எண்ணில் அழைக்கலாம். அல்லது வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

இந்த விதிகள் எஸ்பிஐ, பிஓபி உள்ளிட்ட வங்கிகளில் உள்ளது
முன்னதாக, எஸ்பிஐ, பிஓபி, பிஓஐ, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பிற வங்கிகள் இந்த முறையை கட்டாயமாக்கியுள்ளன. எந்த வங்கியில் எத்தனை காசோலைகளில் பாசிட்டிவ் பேமண்ட் முறை செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

1. எஸ்பிஐ: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜனவரி 1, 2021 முதல் காசோலை செலுத்துவதற்கான புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. 50,000 ரூபாய்க்கு மேல் காசோலை செலுத்துவதற்கு எஸ்பிஐ இதை செயல்படுத்தியுள்ளது, அதாவது ஐம்பதாயிரத்திற்கு மேல் செக் செய்தால் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
2. பேங்க் ஆஃப் பரோடா: காசோலை அனுமதி (பாசிட்டிவ் பே கன்ஃபர்மேஷன்) தொடர்பான பேங்க் ஆஃப் பரோடாவின் விதிகள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்தது. பேங்க் ஆஃப் பரோடாவின் இந்த விதி 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பொருந்தும்.
3. பேங்க் ஆஃப் இந்தியா: இந்திய வங்கியின் காசோலைகள் தொடர்பான இந்த விதிகள் ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வரும். ரூ.50,000/- மற்றும் அதற்கு மேல் காசோலை அனுமதி பெறுவதற்கு பேங்க் ஆஃப் இந்தியா இல் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும். டிராயர் கணக்கு எண், காசோலை எண், காசோலை தேதி, தொகை மற்றும் பணம் பெறுபவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வாடிக்கையாளர் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News