மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. 9.5% வரை வட்டி அள்ளலாம்

Senior Citizens 9.5% FD Interest: சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு (senior citizens FD scheme) வங்கிகள் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்குகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 15, 2023, 10:14 AM IST
  • பேங்க் ஆப் பரோடாவும் வட்டி விகிதத்தை உயர்த்தியது.
  • முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம்.
  • மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.25% வட்டி.
மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. 9.5% வரை வட்டி அள்ளலாம் title=

மூத்த குடிமக்களுக்கு FD மீது 9.5% வரை வட்டி: வங்கி சாரா நிதி நிறுவனமான யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank) அதன் நிலையான வைப்புத் திட்டத்தின் (FD) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. அக்டோபர் 9, 2023 முதல் பொருந்தும் இந்தப் புதிய விகிதத்தின்படி, மூத்த குடிமக்களுக்கு (senior citizens FD scheme) 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு 9.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. செய்தியின்படி, 701 நாட்களுக்கு வைத்திருக்கும் நிலையான வைப்புகளுக்கு (FD) வழங்கப்படும் வட்டி விகிதங்களை வங்கி அதிகரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.45% என்ற கவர்ச்சிகரமான விகிதத்தை இப்போது வழங்குகிறது. இந்த காலகட்டத்தில் சாதாரண மக்களுக்கு 8.95% வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

புதிய கட்டணங்கள் இப்படித்தான் இருக்கும்:
தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான மெச்சூரிட்டி காலத்துடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு, வங்கி பொதுக் குடிமக்களுக்கு 4.50% முதல் 9% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.50% முதல் 9.5% வரையிலும் (Unity Small Finance Bank fd interest rates) வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதேபோல், யூனிட்டி வங்கி 1001 நாட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேசமயம் இது பொது குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.00% வழங்குகிறது. கூடுதலாக, 181 - 201 நாட்கள் மற்றும் 501 நாட்களுக்கு, யூனிட்டி வங்கி மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) ஆண்டுக்கு 9.25% மற்றும் பொது முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.75% வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க | தீபாவளி முன்னிட்டு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய செய்தி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம்:
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ்  (Unity Small Finance Bank) வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit Interest Rate) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகைகளை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். 1.00% முன்கூட்டிய அபராதம் பொருந்தக்கூடிய விகிதம் அல்லது ஒப்பந்த விகிதத்தில், எது குறைவாக இருந்தாலும், வங்கியில் வைப்புத்தொகை இருக்கும் காலத்திற்கு விதிக்கப்படும். சமீபத்தில் பல வங்கிகள் FD மீதான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆப் பரோடாவும் வட்டி விகிதத்தை உயர்த்தியது
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) 3 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலங்களுக்கு நிலையான வைப்பு (FD) விகிதங்களுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் (BPS) வரை அதிகரித்துள்ளது. அக்டோபர் 9, 2023 முதல் ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதங்கள் பொருந்தும்.

இதற்கிடையில், தனியார் கடன் வழங்குபவர்களான யெஸ் வங்கி (Yes Bank) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank ) ஆகியவை ரூபாய் 2 கோடிக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கான குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. IndusInd வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவை அக்டோபர் 2023 இல் தங்கள் FDகளுக்கான FD வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்காக வந்தாச்சி செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே ஜாக்பாட் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News