ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்

Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்? ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் வரும் செப்டம்பர் 14. விவரமாக பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 3, 2024, 12:18 PM IST
ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப் title=

Aadhaar Renewal 10 Years: ஆதார் கார்டு அப்டேட் குறித்து முக்கியமான தகவலைப் பத்தி நாம் தெரிஞ்சுக்க போறோம். அது என்னவென்றால் உங்களுடைய ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயிரம் இருந்தாலும் சரி அல்லது ஆதார் கார்டு எடுத்ததிலிருந்து இதுவரைக்கும் எந்த ஒரு அப்டேட்டும் நீங்க பண்ணாம இருக்கிறீர்கள் ஏன்றாள், வருகின்ற செப்டம்பர் 14 2024 ஆம் தேதிக்குள் உங்களுடைய ஆதார் கார்டை ஒரு முறை நீங்க அப்டேட் பண்ணியே ஆக வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த அப்டேட்டை செய்யவில்லை என்றால் உங்களுடைய ஆதார் கார்டு தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படும் என இந்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஆதார் அட்டையை அப்டேட் செய்வது எப்படி? எங்கே ஆதாரை அப்டேட் செய்வது? ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கு என்னென்ன விதமான டாக்குமெண்ட்ஸ் தேவைப்படும்? அப்படிங்கிற தகல்வாகள் குறித்து முழுமையாக பார்க்கப்போகிறோம். 

ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கான காரணம் என்ன?

பொதுவாக இந்த ஆதார் கார்டு அப்டேட்டை நமது இந்திய ஆதாரணையும் தற்போது கொண்டு வந்ததற்கான முக்கியமான நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. அவைகள் பின்வருமாறு...

1. 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகவும், 

2. அதேபோல 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுப்பதற்காக வழங்கப்பட்ட ஆவணமும் தற்போது வைத்திருக்கக்கூடிய ஐடி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப் மற்றும் உருவத்தின் உண்மை தன்மை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகவும்

3. அதே போல 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் உடன் தற்போது எடுக்கப்படும் பயோமெட்ரிக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இந்த அப்டேட்டை இந்திய ஆதாரணை அமல்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க - உங்களது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி?

ஆதார் கார்டு அப்டேட் செய்யவிளை என்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

ஒருவேளை இந்த ஆதார் அப்டேட்டை நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்று பார்த்தால்... 

உங்களுடைய பான் கார்டையும் உங்களுடைய ஆதார் கார்டையும் லிங்க் பண்ணும்போது மிஸ் மேட்ச் ஆவது காண அதிக வாய்ப்பு இருக்கு. 

அதே மாதிரி ரேஷன் கடையில் ரேஷன் பொருள்களை வாங்கும்போது உங்களுடைய பயோமெட்ரிக் மிஸ் மேட்ச் ஆவதற்கான அதிக வாய்ப்பு இருக்கு. 

அதாவது இதுபோல ஆதார் கார்டு பயோமெட்ரிக் எங்கெல்லாம் பயன்படுத்துகிறீர்களோ அங்கெல்லாம் இந்த மிஸ் மேட்ச் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கும். 

இதன் காரணமாக தான் தற்போது நமது இந்திய அரசு வருகின்ற செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் உங்களுடைய ஆதார் கார்டை ஒரு முறை அப்டேட் செய்துக்கொள்ளுங்கள் என இந்திய ஆதார் ஆணையம் மூலமாக தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆதார் கார்டை அப்டேட் செய்ய என்னென்ன டாக்குமெண்டடுகள் தேவை?

ஆதார் கார்டை அப்டேட் செய்ய இரண்டு டாக்குமெண்ட் அவசியம். ஒன்று ஐடி ப்ரூப், மற்றொன்று அட்ரஸ் ப்ரூப். 

மேலும் படிக்க - 4 வகையான ஆதார் அட்டைகளில் எந்த கார்டை எதற்கு பயன்படுத்தலாம்? UIDAI சொல்லும் டிப்ஸ்!

ஆதார் கார்டை அப்டேட் செய்யும் வழிகள் என்னென்ன?

இந்த ஆதார் அப்டேட்டை பொருத்தவரை நாம் இரண்டு வழிகளில் செய்துக்கொள்ளலாம். ஒன்னு நேரடியாக ஒரு ஆதார் இ-சேவை மையத்திற்கு சென்று அப்டேட்செய்துக்கொல்லாம். 

இரண்டு.. நீங்களே உங்கள் ஃபோன் அல்லது லேப்டாப் மூலமாக அப்டேட் செய்துக்கொள்ள முடியும் என்றால் அப்டேட் பண்ணிக்கலாம் 

ஆதார் கார்டு அப்டேட்டை யாரெல்லாம் செய்ய வேண்டும் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?

இந்த ஆதார் கார்டு அப்டேட்டை பொருத்தவரை யார் யாரெல்லாம் பண்ணனும் யாரெல்லாம் பண்ணத் தேவையில்லை என்பதை ரொம்ப எளிமையாக எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதைக் குறித்து பார்ப்போம். 

உங்களிடம் இருக்கக்கூடிய லேப்டாப் அல்லது உங்களுடைய ஃபோன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். அதாவது https://uidai.gov.in என்ற இந்த வெப்சைட் மூலம் செக் பண்ணி பாத்துக்கலாம். 

-- முதலில் இந்த வெப்சைட் ஓபன் செய்யுங்கள்
-- மை ஆதார் அப்படிங்கிற லிங்கை கிளிக் செய்யவும்... அடுத்த பக்கம் திறக்கும்
-- உங்களுடைய ஆதார் நம்பர் நிரப்ப வேண்டும்.
-- அடுத்தது அங்கே கொடுக்கபட்டுள்ள கேப்சா சரியாக டைப் செய்யவும்
-- அடுத்து ஆதார் அட்டையுடன் எந்த போன் நம்பர் லிங்க் செய்யப்பட்டு உள்ளதோ.. அந்த போன் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும்.
-- அந்த ஓடிபி-ஐ டைப் பண்ணிட்டு என்டர் செய்யவும். புதிதாக ஒரு ஸ்கிரீன் திறக்கும்
--  அதில் உங்களுடைய ஆதார் கார்டை அப்டேட் பண்ணனுமா வேணாமா என்பது குறித்த தகவல் இருக்கும். 

மேலும் படிக்க - Aadhaar Card: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் அட்டையின் நிலை என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News