சனி பெயர்ச்சி, 3 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும்

ஜோதிட சாஸ்திரப்படி சனி மிக மெதுவாக நகரும் கிரகம் ஆகும். அதன்படி சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 26, 2022, 12:26 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
  • எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.
சனி பெயர்ச்சி, 3 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும் title=

ஜோதிட சாஸ்திரப்படி சனி மிக மெதுவாக நகரும் கிரகம் ஆகும். அதன்படி சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சனீஸ்வரன் கர்ம பலன்களின் கிரகமான கருதப்படுகிறார். நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் ஏப்ரல் 29 அன்று அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் நுழைகிறார். கிரக இயக்கத்தின் பார்வையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கவுள்ளது. சிலருக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

மேஷம்: ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி நுழைவது பல நன்மைகளைத் தரும். அவர்களின் விருப்பம் நிறைவேறும். சனிபகவான் செல்வ வளம் தருவார். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்க முழு வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த சிறப்பன பலன் தரும்.

ரிஷபம்: சனி ராசி மாறியவுடன் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உதிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை மாற விரும்புபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்யும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் உகந்தது. புதிதாக தொழில் தொடங்க விரும்பினால் நல்ல லாபத்தை ஈட்டலாம். 

தனுசு: சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்களை தரும். இவர்கள் ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபடுவார்கள், மேலும் இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் சுப பலன்கள் வர ஆரம்பிக்கும். தடைகள் அனைத்தும் விலகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

இரண்டு கட்டங்களில் கும்பத்தின் நுழைவு
சனி இரண்டு கட்டங்களாக கும்ப ராசிக்குள் நுழைகிறது. முதலில், சனி பகவான் ஏப்ரல் 29 முதல் ஜூன் 4 வரை கும்ப ராசியிலும், ஜூன் 4 முதல் ஜூலை 12 வரை பிற்போக்கு இயக்கத்திலும் இருப்பார். ஜூலை 13-ம் தேதி சனி மகர ராசிக்கு திரும்புகிறார். அவர் ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இந்த நாளில் இருந்து, சனி பகவான் மீண்டும் கும்ப ராசியில் பிரவேசித்து, மார்ச் 29, 2025 வரை அங்கு இருப்பார். 

 (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News