லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், குழந்தை பிறப்பு என்பதை பெண்களுடன் மட்டும் தொடர்பு படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான பென்னட் காஸ்பர்-வில்லியம்ஸ், 2011 ஆம் ஆண்டு தான் மாற்றுத்திறனாளி என்பதை முதலில் உணர்ந்ததாகவும், ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் தன் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார். பின்னர் 2017 ஆம் ஆண்டில் அவர் தனது வருங்கால கணவர் மாலிக்கை சந்தித்தார் மற்றும் இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். பின்னர் பென்னட் தனது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொண்டார். இதன் மூலம், பென்னட்டின் கருப்பைகள் செயல்படத் தொடங்கின. பின்னர் அவர் கருத்தரித்து குழந்தை பெற முயற்சிப்பேன் என்றார். அதன் படியே விரைவில், பென்னட் கர்ப்பமானார். 2020 அக்டோபரில் சிசேரியன் மூலம் மகன் ஹட்சனைப் பெற்றெடுத்தனர்.
முன்னதாக 2015 ஆம் ஆண்டு, பென்னட் தனது மார்பகங்களை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்காக அவர் $5,000 செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Bizarre Record: உடலின் அந்தரங்க உறுப்பில் 278 துளை! இது படுக்கையறை மகிழ்ச்சி ரகசியம்
தான் குழந்தையைப் பெற்றெடுத்தது பற்றி பேசிய பென்னட், இது உடனடியாக யோசிக்காமல் எடுத்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார். 'எனது உடலும் கர்ப்பத்தைத் தாங்கும் சக்தியும், பிரசவம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் பாலினம் தொடர்பான முழுமையான புரிதல் வரும் வரை நான் காத்திருந்தேன் என்கிறார்.
'குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் அனைவரும் தாய்கள் அல்ல' எனக் கூறும் பென்னட், எல்லாப் பெண்களும் தாயாகலாம், எல்லாத் தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் என்பதால் அனைவரும் தாய்மார்கள் என்பது தவறான ஒப்புமை. 'தாய்மை' என்ற அடிப்படையில் 'பெண்மையை' வரையறுப்பதை நிறுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம் என பென்னட் கூறினார். .
டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சிகிச்சையை தவிர வேறு எந்த மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல் மார்ச் 2020 ஆம் ஆண்டு பென்னட் கர்ப்பமானார். அப்போது கொரோனா தீவிரமாக இருந்த நிலையில், எனவே என்னையும் என் குழந்தையையும் எவ்வாறு பாதுகாப்பது என்று நான் மிகவும்கவலைப்பட்டேன் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் ஹட்சனைப் பெற்றெடுத்தார்.எனினும் மருத்துவமனையில் வித்தியாசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ALSO READ | உலகின் 3 ‘பலே’ திருடர்கள்! வியக்க வைக்கும் ‘Money Heist’ கொள்ளை சம்பவங்கள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR