66 ஆண்டுகளுக்கு பிறகு நகம் வெட்டிய ஸ்ரீதர் சில்லால்!

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நகம் வெட்டினார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 12, 2018, 01:47 PM IST
66 ஆண்டுகளுக்கு பிறகு நகம் வெட்டிய ஸ்ரீதர் சில்லால்! title=

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நகம் வெட்டினார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் (88 வயது) கடந்த 1952-ம் ஆண்டு முதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு இவர் உலகிலேயே மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், தற்போது 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் தனது கை நகங்களை வெட்டினார். அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது.

இந்த அலுவலகத்தில் கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

 

 

 

 

இதையடுத்து, ஸ்ரீதர் சில்லால், பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டு ‘நகதவத்தை’ வெட்டினார். 

Trending News