குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்! ஜாக்கிரதை!

இரவு தூங்கும் போது ஒரு நிலையில் படுத்து இருந்தாலும், காலையில் எழுந்திருக்கும் போது வேறு நிலையில் படுத்து இருப்போம். இருப்பினும், தூங்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2024, 07:11 PM IST
  • தூங்கும் முறையில் கவனம் இருக்க வேண்டும்.
  • குப்புற படுத்து தூங்குவதால் மாரடைப்பு ஏற்படுமா?
  • நிபுணர்கள் சொல்வது என்ன?
குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்! ஜாக்கிரதை! title=

இன்றைய பிஸியான உலகில், ஒவ்வொருவரும் நல்ல தூக்கத்தை பெறுவது கடினமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தூங்கும் நிலை உண்டு. ஒருசிலருக்கு குப்புற படுத்து தூங்குவது பிடிக்கும், ஒருசிலருக்கு காலை மடக்கி தூங்குவது பிடிக்கும், ஒரு சிலருக்கு நேராக படுத்து தூங்குவது பிடிக்கும், ஒரு சிலருக்கு உட்கார்ந்து தூங்குவது பிடிக்கும். நீங்கள் தூங்கும் நிலை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே சரியான நிலையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் வயிற்று பகுதியை கீழே வைத்து, குப்புற படுத்து தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் சுவாசம், இதயத் துடிப்பு ஆகியவற்றைப் பாதிக்கலாம் மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாதுகாப்பாக தூங்குவது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த உணவுகளுக்கு ஹலோ சொல்லுங்க.... சிறுநீரகம் சூப்பரா இருக்கும்

குப்புறபடுத்து தூங்குவது இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தாது

அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் அடைப்பு போன்றவற்றால் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்திற்கு போதிய ரத்தம் கிடைக்காவிட்டால், இதய தசைகள் இறக்க நேரிடும். நீங்கள் குப்புறபடுத்து தூங்குவது இதய நோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்காது. இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது மாரடைப்பு ஏற்படுகிறது, இது ஒரு தீவிர பிரச்சனை.

உடலின் மற்ற பாகங்களை பாதிக்கலாம்

நீங்கள் குப்புறபடுத்து தூங்குவது இதயம் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் இப்படி தூங்குவது சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் உங்கள் முதுகெலும்பில் அழுத்தம் கொடுக்கலாம் மற்றும் உங்கள் இதயம் சரியாக வேலை செய்வதை கடினமாக்கும். தூக்க நிலைக்கும் மாரடைப்புக்கும் நேரடியாக எந்த ஒரு நிரூபிக்கப்பட்ட தொடர்பு இல்லை என்றாலும், குப்புறபடுத்து தூங்குபவர்களுக்கு ஒட்டுமொத்த மன அழுத்தம் மற்றும் அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் வசதியாகவும் வைத்திருக்கும் வகையில் தூங்குவது முக்கியம்.

சுவாசிப்பதில் சிரமம் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் முதுகுத்தண்டை நல்ல நிலையில் வைத்திருக்க உங்கள் முதுகில் அல்லது பக்கவாட்டில் தூங்குவது நல்லது. ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது இதய பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News