இனி சிலிண்டர் தேவையில்லை... வந்துவிட்டது சூரிய அடுப்பு - பட்ஜெட் பத்மநாபன்கள் படுகுஷி!

Solar Nuttan Cooking Stove : எல்பிஜி எரிவாயுவை பயன்படுத்துவதற்கு மாற்றாக, 'சூர்ய நூதன்' என்ற சூரிய ஒளியால் இயங்கும் அடுப்பை இந்திய ஆயில் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கு எரிவாயூ அமைச்சகம் வடிவமைத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 29, 2022, 03:37 PM IST
  • அனைத்து சீசன்களிலும், தட்பவெட்ப நிலைகளிலும் இதை பயன்படுத்தலாம்.
  • வீட்டின் சமையல் அறையில் இருந்தே பயன்படுத்துவதுதான் இதன் தனிச்சிறப்பு.
  • சுற்றுச்சூழலுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பேரூதவியாக இருக்கும்
இனி சிலிண்டர் தேவையில்லை... வந்துவிட்டது சூரிய அடுப்பு - பட்ஜெட் பத்மநாபன்கள் படுகுஷி! title=

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எப்போது குறையும், எவ்வளவு மானியம் கிடைக்கும் என்ற மனநிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் இருக்கின்றன. கூட்டுக்குடும்பங்கள் முதல் பேச்சிளர் அறை வரை சிலிண்டர் என்பது எப்போதும் நம் கவனிப்பில் இருந்துகொண்ட இருக்க வேண்டும். 

கேஸ் சிலிண்டர் பயன்படுத்த இயலவில்லை என பலரும் எலெக்ட்ரிக் இன்டக்ஷன் அடுப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதுவும் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் என்பதால் அதையும் சிலர் தவிர்த்துவிடுகின்றனர்.  

இதற்கெல்லாம் ஒரு மாற்றாக, இந்திய ஆயில் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கு எரிவாயூ அமைச்சகம்  'சூர்ய நூதன்' என்ற சூரிய ஒளியால் இயங்கும் அடுப்பை வடிவமைத்துள்ளனர். சூர்யா நூதன், ரீசார்ஜ் செய்யக்கூடிய வீட்டின் உட்புறத்தில் பயன்படுத்தக்கூடிய சூரிய ஒளி சமையல் அடுப்பாகும். இது ஃபரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயிலின் ஆர் & டி மையத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதற்கு காப்புரிமையையும் பெறப்பட்டது. 

மேலும் படிக்க | கண்டிப்பா செய்யமாட்டாம்... ஆனா புத்தாண்டுக்கு மறக்காமல் எடுக்கும் டாப் 5 Resolutions இதோ!

வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் அமைத்து, அதன்மூலம் கைப்பற்றப்பட்ட சூரிய சக்தியைக் கொண்டு செல்லும் கேபிள் மூலம் இந்த அடுப்பிற்கு செலுத்தப்படும். இதன்மூலம், சமையலறையில் இருந்துகொண்டே சூரிய சக்தி மூலம் உணவை சமைக்கலாம். குறிப்பாக, இதனை சூரிய ஒளி விழும் இடத்தில் வைக்கத் தேவையில்லை என்பதுதான் இதன் தனித்தன்மை.

இந்த சூரியன் மூலம் சார்ஜ் செய்யும் போது அப்படியே சமையல் செய்யலாம். மேலும் இது ஒரு கலப்பின பயன்முறையில் வேலை செய்கிறது. சூரிய மற்றும் துணை ஆற்றல் ஆதாரங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியும். எனவே, அனைத்து பருவங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.

இந்த சாதனம் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் உதவியளிக்ககூடிய ஒன்றாகும். ஏனென்றால், தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் எல்பிஜி அதிகம் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. அதாவது நம் தேவையில் 50 சதவீதம் எல்பிஜி எரிவாயுவை வெளிநாட்டில் இருந்துதான் பெறுகிறோம். இதனால், இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் கெடாமல் இருக்கும். 

இந்த அடுப்பை பயன்படுத்துவதன் மூலம், இந்தியா தனது கார்பன் டையாக்ஸைட் வெளியேற்றத்தை குறைக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் சோலார் ஒளி அதிதீவிரமாக உள்ள லடாக் உள்ளிட்ட 60 இடங்களில் வைத்து சோதித்து பார்க்கப்பட்டது. 

இதனை அனைத்து தட்பவெட்ப சூழலிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். சூர்யநூதன் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வர உள்ளது. பேஸிக் மாடல் ரூ. 12 ஆயிரத்திற்கும், டாப் மாடல் ரூ. 23 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியன் ஆயில் பெட்ரோல், டீசல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 

கொஞ்சம் விலை அதிகம் என்றாலும், கேஸ் சிலிண்டர் விலையை ஒப்பிட்டால் ஒருமுறை வாங்கி தொடர் சேமிப்பை செய்யலாம். இந்த அடுப்பில், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மூன்று வேளைகளும் சமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் விற்பனைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News