உங்கள் திருமணம் எப்போது? கனவுகள் கூறும் ஜோதிடம்!

உங்கள் கனவுகள், உங்கள் திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு மறைக்கப்பட்ட பதில்களைக் கொண்டுள்ளன

Updated: Aug 29, 2019, 05:50 PM IST
உங்கள் திருமணம் எப்போது? கனவுகள் கூறும் ஜோதிடம்!
Representational Image

கனவுகளைப் பற்றிப் பேசும்போது, ​​கனவுகளைப் பார்க்காத எந்தவொரு நபரும் உலகில் இல்லை. கனவுகள் அனைவருக்கும் வந்து பல விசித்திர கதைகளை சொல்லி செல்லும். பல சுவார்யசிய நிகழ்வுகளை காண்பித்து செல்லும்.

உங்கள் கனவில் இடம்பெறும் பல சுவார்யசிய நிகழ்வுகளில் குறிப்பிட்ட இந்த சில நிகழ்வுகள் வந்துச்சென்றால், விரைவில் உங்களுக்கு திருமணம் நிகழும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கனவுகள் உங்கள் திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு மறைக்கப்பட்ட பதில்களைக் கொண்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. 

பெரும்பாலும் நமக்குத் தெரியாது, அந்தக் கனவுகளைப் பற்றி நமக்குப் புரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், உறவுகள் மற்றும் திருமணத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் இத்தகைய கனவுகளைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம், இதன் மூலம் உங்கள் திருமண தேதியை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்...

1. ஒரு இளம் திருமண கோளத்தில் உங்கள் கனவில் வந்து சென்றால், குறித்து வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் காதல் விரைவில் கைகூடி திருமணத்தில் முடியும் என்று...

2. உங்கள் கனவில் நீங்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதுப் போல் கண்டால், நீங்கள் விரைவில் ஒரு மணமகனாகவோ அல்லது மணமகளாகவோ ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

3. திருமணமாகாத ஒரு பெண் தன் கனவில் சிற்பியைப் பார்த்தால், அவள் விரைவில் மணமகள் ஆகிவிடுவாள் என்று கூறப்படுகிறது.

4. ஒரு பெண் தன் கனவில், தன் நண்பர் கொடுத்த வளையலை அணிவதாகவோ, அணிந்திருப்பதாகவோ கண்டால், அது அந்த பெண் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்பதற்கான அறிகுறியாகும்.

5. தன் கனவில், தன்னை திருமண பெண் (அ) மணமகனாக பார்த்தால், விரைவில் அவர் பெண்ணையோ அல்லது ஒரு பையனையோ திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என கூறப்படுகிறது.

6. ஒரு இளம்பெண் தனது கனவில் தான் ஒரு கண்காட்சியில் நடப்பது போல் கனவு கண்டால், அவள் விரைவில் மணமகள் ஆகிவிடுவாள் என்று கூறப்படுகிறது.

7. ஒரு நபர் தன் கனவில் தான் ஹெலிகாப்டரில் உட்கார்ந்திருப்பதைக் கண்டால், அவர் / அவள் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என கூறப்படுகிறது.