December Horoscope: டிசம்பரில் இதுவரை மூன்று கிரகங்கள் தாங்கள் இருந்த ராசிகளில் இருந்து வேறு ராசிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இன்று புதன் கிரகத்தின் ராசி மாறியுள்ளது. இதற்குப் பிறகு சூரியனின் ராசி மாற்றம் (Sun Transit 2021) நடக்கப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் தங்கள் ராசியை (Zodiac Signs) மாற்றினால், அது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. சில ராசிகள் மீது சுபமான தாக்கமும் சில ராசிகள் மீது தீய தாக்கமும் ஏற்படுகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 31 வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இல்லை. டிசம்பர் 31 வரை இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவை எந்தெந்த ராசிகள் என இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்:
ரிஷப (Taurus) ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். கல்வி தொடர்பான பணிகளில் கவனம் தேவை. சிரமங்களை சந்திக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. நண்பர்களுடன் நேரத்தை வீணடிப்பீர்கள். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரக்கூடும்.
ALSO READ | இந்த 4 ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்: காரணம் என்ன? பரிகாரம் என்ன?
மிதுனம்:
மன உளைச்சலால் நீங்கள் சிரமப்படுவீர்கள். குடும்பப் பணிகளில் குறுக்கீடுகள் வரலாம். குழந்தையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தொழிலில் தடைகள் ஏற்படும். நிதி இழப்பு ஏற்படலாம். வாகனங்களால் ஏற்படும் சுகம் குறையும். வாழ்க்கை துணைக்கு நேரம் கொடுக்காதது இவர்களை சிக்கலில் சிக்க வைக்கும்.
கன்னி:
கன்னி (Virgo) ராசிக்காரர்கள் யாரிடமும் பேசுவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கடின உழைப்பால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும்.
துலாம்:
மனம் அமைதியில்லாமல் இருக்கும், இதனால் வேலை பாதிக்கப்படும். எந்த ஒரு புதிய வேலையையும் கவனத்துடன் தொடங்கவும். இல்லையெனில், சேதம் ஏற்படலாம். உரையாடலில் சமநிலை பேணப்பட வேண்டும். உரையாடலில் கோபப்படுவதைத் தவிர்க்கவும். நண்பர்களால் பண இழப்பு ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன். ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | சனி பெயர்ச்சி; அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR