TNPSC Admit Cards 2022 RELEASED : 789 நில அளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) அன்று நடைபெறுகிறது. இதன் முதல் தாள் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 வரையும், இரண்டாம் தாள் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இரண்டு பிரிவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வாளர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை அதிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | JEE 2023: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு! முக்கியத் தகவல்
நுழைவுச்சீட்டை பதிவிறக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
- டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in பக்கத்திற்கு செல்லவும்.
- 'Candidates Corners' என்ற பகுதியில் இருக்கும் "Registered User" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- 'Already Registered' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதில், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிடவும்.
- உள்நுழைந்து Admit Card இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து பதிவிறக்கவும்.
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் விண்ணப்பதாரரின் ஒரு முறை பதிவு (OTR டாஷ்போர்டு) என்ற முறையின் மூலம் மட்டுமே நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? அப்போ இதை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ