Amazon Great Republic Day saleல் அசத்தலான தள்ளுபடியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!

Amazon Great Republic Day saleல்  Apple, Samsung, Xiaomi, OnePlus மற்றும் Tecno போன்றவை பல்வேறு சலுகை விலைகளில் கிடைக்கிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 12:19 PM IST
  • அமேசான் சிறந்த பிராண்டு ஸ்மார்ட்போன்களை அற்புதமான சலுகைகளுடன் அறிமுகம் செய்துள்ளது.
  • SBI வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் 10 சதவீத தள்ளுபடியுடன் இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
Amazon Great Republic Day saleல் அசத்தலான தள்ளுபடியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!  title=

அமேசான் இந்தியா மீண்டும்  Republic Day saleஐ கொண்டு வந்துள்ளது.  இதில் எப்போதும் போலவே, இந்த வருடமும் கண்களைக் கவரும் வகையில்,  சிறந்த பிராண்டு ஸ்மார்ட்போன்களை அற்புதமான சலுகைகளுடன் அறிமுகம் செய்துள்ளது.  இதில்  Apple, Samsung, Xiaomi, OnePlus மற்றும் Tecno போன்றவை பல்வேறு சலுகை விலைகளில் கிடைக்கிறது.  SBI வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் 10 சதவீத தள்ளுபடியுடன் இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.  அமேசான் Republic Day sale-ல் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள் இதோ, 

ALSO READ | Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு

1. Apple iPhone 12 : 

Apple iPhone 12 பழைய மாடலாக இருந்தாலும் இன்றளவும் சந்தையில் இது பிரபலமாக உள்ளது.  வழக்கமாக ரூ 60,999க்கு விற்கப்படும்  Apple iPhone 12 ஆனது இந்த தள்ளுபடியில் ரூ 53,999க்கு விற்கப்படுகிறது.  iOS அப்டேட்டுடன் A14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இதில் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே மற்றும் இரண்டு பின்புற கேமராவை கொண்டுள்ளது. 

2. OnePlus Nord CE 5G : 

வழக்கமாக ரூ 24,999க்கு விற்கப்படும்  OnePlus Nord CE ஆனது இந்த தள்ளுபடியில் ரூ.21,999க்கு விற்கப்படுகிறது.  8GB ஸ்டோரேஜ், 90Hz AMOLED டிஸ்ப்ளே, Snapdragon 750G சிப்செட், 5G நெட்வொர்க்கில் இரண்டு சிம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். 

3. Xiaomi 11 Lite NE 5G : 

வழக்கமாக ரூ 26,999க்கு விற்கப்படும் Xiaomi 11 Lite NE 5G ஆனது இந்த தள்ளுபடியில் ரூ 22,499க்கு விற்கப்படுகிறது.  இது 158 கிராம் எடை கொண்டது, இதில் 10-பிட் AMOLED 90Hz டிஸ்ப்ளே. ஸ்னாப்டிராகன் 778G 5G சிப்செட், 64MP டிரிபிள் ரியர் கேமராக்களையும் கொண்டுள்ளது. 

4. Samsung Galaxy S20 FE 5G : 

வழக்கமாக ரூ. 42,990க்கு விற்கப்படும் Samsung Galaxy S20 FE ஆனது இந்த தள்ளுபடியில் : ரூ 33,740க்கு விற்கப்படுகிறது.  Galaxy S20 FE ஆனது ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 12MP பின்புற டிரிபிள் கேமராக்களையும் கொண்டுள்ளது. 

5. iQOO Z3 5G : 

வழக்கமாக ரூ.22,990க்கு விற்கப்படும் iQOO Z3 5G ஆனது இந்த தள்ளுபடியில் ரூ.14,740க்கு விற்கப்படுகிறது. இது 6.58 இன்ச் 120 hzடிஸ்ப்ளே,  64MP டிரிபிள் கேமராக்கள், 4400mAh பேட்டரி 55W வேகமாக சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 

6. Redmi Note 11T 5G 

வழக்கமாக ரூ 18,999க்கு விற்கப்படும் Redmi Note 11T ஆனது இந்த தள்ளுபடியில் ரூ 14,749க்கு விற்கப்படுகிறது.  இதில் Dimensity 810 5G சிப்செட் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. 

7. Samsung Galaxy M21 2021 : 

வழக்கமாக ரூ. 14999 க்கு விற்கப்படும் Samsung Galaxy M21 ஆனது இந்த தள்ளுபடியில் ரூ.10,800க்கு விற்கப்படுகிறது.  இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸுடன் கூடிய சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,  டிரிபிள் ரியர் கேமராக்கள், 4ஜிபி ரேம் ஆன்போர்டு மற்றும்  6,000mAh பேட்டரி உள்ளது. 

8. Samsung Galaxy M32 5G : 

வழக்கமாக ரூ 25,999க்கு விற்கப்படும் Samsung Galaxy M32 5G ஆனது ரூ 17,749க்கு விற்கப்படுகிறது.  இது MediaTek Dimensity 720 சிப்செட், 5,000mAh பேட்டரி, 48MP குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 

9. Tecno Spark 8T : 

வழக்கமாக ரூ.12,999க்கு விற்கப்படும் Tecno Spark 8T ஆனது ரூ.8,370க்கு விற்கப்படுகிறது.  இது MediaTek Helio G35 கேமிங் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, ஒரு பெரிய 6.6-இன்ச் HD டிஸ்ப்ளே, DTS சவுண்ட் ஸ்பீக்கர்களை  கொண்டுள்ளது. 

10. Xiaomi Mi 11X 5G : 

வழக்கமாக ரூ.33,999க்கு விற்கப்படும் Mi 11X 5G ஆனது ரூ.26,749க்கு விற்கப்படுகிறது.  இதில் 120 Hz டிஸ்ப்ளே, 48MP டிரிபிள் கேமரா உள்ளது.  ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,520mAh பேட்டரி உள்ளது.

ALSO READ | WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News