Signs To Leave Your Toxic Job : நம்மில் பலருக்கு நாம் பார்க்கும் வேலை பிடிக்காமல் இருக்கும். நமது மனநிலை அலுவலகத்திற்கு செல்லும் போது கூட, பிடிக்காத வேலையை செய்தால் நம் மனநிலை மந்த நிலைக்கு பாேகவும், நம்மை நாமே வெறுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல சமயங்களில், நமது வேலை சரியானதாக இருந்தாலும், உடன் வேலை பார்ப்பவர்கள் டாக்ஸிக் ஆக இருந்தால் நாம் மிகவும் இருளான இடத்தில் இருப்பது போல உணரலாம். எனவே, ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக உங்கள் வேலையை நீங்கள் விட்டுவிட வேண்டும்.
வேலை பற்றிய கவலை உணர்வு
வேலையில் இருக்கும் போது மட்டுமல்ல, வேலையில் இல்லாத போது கூட உங்களுக்கு பதட்டமான அல்லது கவலைக்குரிய உணர்வு தோன்றினால், நீங்கள் வேலையை விடுவதை பற்றி யோசிக்கலாம். ஏதாவது தவறு செய்து விட்டோமா? ஏதாவது தவறாகி விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம், அதிகப்படியான வேலை மற்றும் தோல்வி பெறுவதற்கான பயம் ஆகும். உடன் வேலை பார்ப்பவர்கள் டாக்ஸிக் ஆக இருந்தாலும் இது போன்ற உணர்வு ஏற்படும்.
சோர்வான மனநிலை:
உங்களுக்கு பிடிக்காத அல்லது ஒத்து வராத வேலையில் இருந்தால் மனதளவிலும் உடல் அளவிலும் எப்போதும் சோர்வாகவே உணர்வீர்கள். இதற்கு காரணம், நீங்கள் பார்க்கும் வேலையும், அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் உங்களிடம் இருந்து சக்தியை அப்படியே உருஞ்சுகிறது. இது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும் பாதிக்கலாம். வேலைக்கு புதிதாக சேர்ந்தவர்கள் இடத்திலும் இது போன்ற உணர்வு இருக்கலாம். ஆனால், ஓரிரண்டு மாதங்களில் இந்த உணர்வு விலகவில்லை என்றால் கண்டிப்பாக அந்த வேலையில் இருந்து விலகுவது குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும்.
டாக்ஸிக் ஆன அலுவலகம்:
உங்கள் அலுவலகத்தில் உங்களை பற்றியோ அல்லது வேறு ஒருவர் பற்றி உங்களிடமோ பின்னாடி பேசுகிறார்கள் என்றால், அது டாக்ஸிக் அலுவலகத்திற்கான அறிகுறியாகும். ஒருவரை வார்த்தைகளால் துன்புருத்துவது, அலுவலகத்தில் அரசியல் செய்வது போன்ற விஷயங்கள் நடக்கும் போது அங்கு வேலை செய்யவே பலருக்கு எரிச்சலாகவும் கடினமாகவும் இருக்கும். இது, மனதளவிலும் உங்களை பாதிப்படைய செய்யலாம். எனவே, இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் அலுவலகத்தில் நீங்கள் இல்லாமல் இருப்பது நன்று.
மேலும் படிக்க | அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!
வேலை-வாழ்க்கை சமநிலை:
உங்கள் வேலையை முதன்மை படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் செய்கிறீர்களோ அதையெல்லாம் புறம் தள்ளி வைக்கிறீர்கள் என்றால், அங்கு work-life balance இல்லை என்று அர்த்தம். இது, உங்கள் மீது உங்களுக்கே அதிக கோபத்தை உண்டாக்கும். வேலையில் உங்களை அதிக நேரம் இருக்க வைப்பது, வேலை நேரத்தை தாண்டி உங்களை வேலை பார்க்க சொல்வது போன்ற விஷயங்கள் இருந்தால், அந்த அலுவலகத்திற்கு குட்-பை சொல்வது நல்லது.
தகுதியற்றது போன்ற உணர்வு:
உங்கள் வேலையில் நீங்கள் செய்யும் விஷயங்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுவது போல தோன்றினாலோ அல்லது உங்கள் வேலைக்கான சம்பளம் உங்களுக்கு கிடைக்காதது போல தோன்றினாலோ உடனே அந்த இடத்தில் இருந்து விலகிவிட வேண்டும். நீங்கள் செய்யும் வேலைக்கு ஒரு இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை எனும் போது, அது உங்களுக்குள் ஒரு விதமான தகுதியற்ற உணர்வை ஏற்படுத்திவிடும். எனவே, உங்களை மதிக்கும் இடத்தில் மட்டும் நீங்கள் இருங்கள்.
மேலும் படிக்க | ஆண்கள் காதலிக்கு துரோகம் செய்வது ஏன்? நம்ப முடியாத 8 காரணங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ