அங்கிகரிக்கப்பட்ட பாலியல் விடுதிகளை அடைக்க அரசு முடிவு!

2020-ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்டர்டன் நகரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பாலியல் விடுதிகளை முடக்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது!

Last Updated : Mar 25, 2019, 04:07 PM IST
அங்கிகரிக்கப்பட்ட பாலியல் விடுதிகளை அடைக்க அரசு முடிவு! title=

2020-ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்டர்டன் நகரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பாலியல் விடுதிகளை முடக்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது!

இந்த புதிய விதிமுறைகளான வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பாலியல் விடுதிகளால் தற்போது மக்களுக்கு இடையூரு அதிகமாகி இருப்பதால் தற்போது இந்த பாலியல் விடுதிகளை முடக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த கிராமங்களின் இறையாண்மையை காக்கவும், சுற்றுலா பயணிகளின் வரவை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற பாலியல் விடுதிகள் செயல்படும் பகுதிகளில் குடியிருப்புகள் இருப்பதால், அங்கு வாழும் கிராம வாசிகளையும் இந்த தொழில் பாதிப்பாதக குறிப்பிட்டுள்ள அரசு, இதுதொடர்பான ஆய்வு ஒன்றினை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் படி, சுற்றுலா வரும் பயணிகள் விலை மாதுகளை விடுதியை விட்டு வெளியே அழைத்துச் சென்று கிராம மக்களையும் முகம்சுலிக்க வைப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் 80% பாலியல் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளின் இந்த செயல்பாட்டிற்கு ஆதரவு அளித்து செயல்படுவதாக தெரிகிறது. 

பழமை மாற பாலியல் தொழில் மறபுகளை சில சுற்றலா பயணிகள் பின்பற்றி வந்தாலும், பல சுற்றலா பயணிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பிட்ட இந்த சுற்றுலா பயணிகளின் வரவிற்கு காரணம் விலைமாதுகள் என்பதால் பாலியல் விடுதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேயர் யுடோ கோக் தெரிவித்துள்ளார். இத்துடன் பாலியல் விடுதிகளில் இணைக்கப்பட்டுள்ள பார்களும் அடைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த அத்துமீறல்களை தடுக்க, பாலியல் விடுதிகளுக்கென தனி நகரம் அமைக்கவும், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தனி கேளிக்கை வரி வசூளிக்கவும் அரசு திட்டமிட்டது, ஆனால் முறையாக நடைமுறை படுத்தப்படாத நிலையில் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பாலியல் விடுதிகளுக்கு பெயர்பெற்ற ஆம்ஸ்டர்டன் நகருக்கு சுமார் 19 மில்லியன் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Trending News