ரயில் விபத்து... ‘இந்த’ பெட்டியில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானது..!!

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடந்த பெரிய ரயில் விபத்தை அடுத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2024, 03:47 PM IST
  • ரயில் விபத்துகளில் அதிக இழப்பை சந்திக்கும் சில பெட்டிகள்.
  • ரயிலின் மிகவும் பாதுகாப்பான பெட்டிகள்.
  • விபத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ரயில் விபத்து...  ‘இந்த’ பெட்டியில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானது..!! title=

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடந்த பெரிய ரயில் விபத்தை அடுத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதியதில் 9 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பொதுவாக பயணிகள் ரயில் ஒரு பெரிய விபத்தை சந்திக்கும் போது, ​​பயணிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, ஏனெனில் ரயில் மிக அதிக வேகத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்து பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து யாரும் தப்பிப்பது அரிது. எனினும், ரயில் விபத்தில் எந்தப் பெட்டியில் மிகக் குறைவான சேதம் ஏற்படுகிறது தெரியுமா? ரயில் விபத்து ஏற்பட்டால் உயிர் பிழைப்பதற்கான அதிக வாய்ப்பு எதில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?... அதை பற்றி விபரமாக அறிந்து கொள்ளலாம்

விபத்துகளில் அதிக பாதிப்பை சந்திக்கும் பெட்டிகள்

முன்பக்கமாகவோ, பின்பக்கமாகவோ ரயிலில் மோதும் போது, ​​முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஜெனரல் கோச் எனப்படும் அன்ரிசர்வ்ட் கோச் தான். அதேபோல், ஒரு ரயில் தடம் புரண்டு, மற்றொரு ரயிலில் மோதினால், அதிகபட்ச சேதம் முதலில் பொதுப் பெட்டிகளுக்குத்தான் ஏற்படுகிறது. பொதுப் பெட்டிகளில் உள்ள இருக்கை/ படுக்கை வசதியை விட பல மடங்கு அதிக பயணிகள் இருப்பதால், இந்த பெட்டிகளில் உயிர் மற்றும் உடைமை இழப்பும் ஏற்படுகிறது.

ரயிலின் மிகவும் பாதுகாப்பான பெட்டிகள்
ரயிலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், ரயில் முழுவதும் சேதமடைந்து, பயணிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், மற்ற பெட்டிகளுடன் ஒப்பிடும்போது சேதமடையும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் சில பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகள் ஏசி பெட்டிகள். இத்தகைய பெட்டிகள் ரயிலின் நடுவில் இருப்பதால் பாதுகாப்பானது என்று அழைக்கலாம். ஒரு ரயிலில் முன்பக்கத்தில் உள்ள, பொதுப் பெட்டிகளை விட ஏசி பெட்டிகளில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். இதனுடன், ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளை விட ஏசி பெட்டிகளில் கூட்டம் குறைவாக இருப்பதால், இழப்பு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்

விபத்தில் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டியவை

ரயில் விபத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நீங்கள் பயணிகள் இருக்கையில், மத்தியில் அமர்ந்திருப்பது நல்லது. நீங்கள் பெட்டியில் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தால், அதிர்ச்சியின் காரணமாக நீங்கள் ரயிலின் சுவர், தரை, இருக்கை, ஜன்னல் ஆகியவற்றில் நேரடியாக இடித்துக் கொள்ளாமல் இருக்கலாம். இதனால் விபத்தில், காயமடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. ரயிலில் உங்கள் உடல் இயக்கங்களைக் குறைக்க முயற்சி செய்யவும். இதனுடன், நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம், பின்னால் தள்ளி சரியாக உட்கார முயற்சிக்கவும். இதன் காரணமாக, அதிர்ச்சி ஏற்பட்டால் நீங்கள் திடீரென்று கீழே விழாமல் இருப்பீர்கள்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News