தினமும் நாம் 25 கப் வரை காஃபி சாப்பிடலாம் எனவும் இதனால் உடலுக்கு ஆபத்தில்லை எனவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது!
காஃபி காதலர்களுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது. காஃபி பழக்கத்தால் பல கேட்ட விசயங்கள் இருந்தாலும் அதில் சில நல்ல விஷயங்களும் அடங்கியுள்ளது. நமக்கு வேலையின் போது ஏற்படும் மனஅழுத்தமாக இருந்தாலும் சரி, தலைவலியாக இருந்தாலும் சரி, அலுப்பாக இருந்தாலும் சரி நமக்கு உடனே மனதில் தோன்றுவது ஒரு கப் காஃபி குடிக்கலாமா என்று தான் தோன்றும். இப்படி நாம் வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களையும் காஃபியுடன் பொருத்திப்பார்த்துவிடலாம். ஆனால், காஃபி அருந்துவது நமது உடலுக்குப் பொருத்தமானதுதானா என்ற கேள்வி பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
முன்பு காஃபி குடிப்பது இதய நோயை வரவழைக்கும் என்று கருதப்பட்டது. இருதயத்திற்கு சுவாசக் காற்றை உட் கொண்ட ரத்தத்தை செலுத்தும் நாளங்கள் இறுக்கமடைவதாகவும் இதன் காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்படக் கூடும் என்றும் முன்பு கருதப்பட்டது. ஆயினும் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பலமுறை காபி அருந்துகின்றனர். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிக்கலாம் என்ற ஆய்வை நடத்தியுள்ளது ஆஸ்திரேயாவில் உள்ள தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்.
அந்த ஆய்வின் முடிவில், 'காபியில் இருக்கும் கபைன் அதிக அளவில் உடலுக்குள் செல்லும்போது உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் ரத்தஅழுத்தம் இதய நோய்களுக்குப் பிரதான காரணியாக விளங்குகிறது. அதனால் அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 22 சதவிகிதம் அதிகரிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 ஆயிரம் பேரை தேர்வு செய்து லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. தினமும் ஒரு கப் காபி அருந்துபவர்கள், மூன்று கப் வரை அருந்துபவர்கள், பல முறை அருந்துபவர்கள் என பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, யாருடைய உடலிலும் காபி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.