Unbelievable Vi: வெறும் ரூ.11-க்கு தினமும் கிடைக்கும் வரம்பற்ற அழைப்பு, 4ஜிபி தரவு

ரூ .299 திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 5, 2021, 09:18 AM IST
  • Vi வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு புதிய சலுகைகளை வழங்க உள்ளது.
  • நிறுவனம் அதிரடியான ரூ .299 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வார இறுதி தரவு மாற்றம் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவி-க்கு இலவச சந்தா போன்ற பிற அம்சங்களும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.
Unbelievable Vi: வெறும் ரூ.11-க்கு தினமும் கிடைக்கும் வரம்பற்ற அழைப்பு, 4ஜிபி தரவு title=

புதுடெல்லி: இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு புதிய சலுகைகளை வழங்க உள்ளது. புதிய திட்டங்களில் அதிரடியான மலிவு விலையில், அதிகப்படியான தரவு, இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கின்றன.  

அத்தகைய ஒரு திட்டத்தில், Vodafone Idea, 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்கு ஒரு நாளைக்கு ரூ .11 க்கும் குறைவாகவே செலவிட்டால் போதும். Vodafone Idea இந்த அதிரடியான ரூ .299 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ .299 திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒட்டுமொத்தமாக, Vi இந்த திட்டத்துடன் 112 ஜிபி அதிவேக தரவை (High Speed Data) வழங்குகிறது.

திட்டத்தின் நாளொன்றுக்கான விலையை கணக்கிட்டால், வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ரூ .11 க்கும் குறைவாகவே செலவிட வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து நன்மைகளையும் தவிர, இந்த திட்டம் Binge All Night வசதியையும் வழங்குகிறது. Binge All Night சலுகையைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை இலவசமாக பயன்படுத்தலாம். 

ALSO READ: BSNL New Plan: 40 ஜிபி டேட்டாவை 499 ரூபாய்க்கு கொடுக்கும் பிஎஸ்என்எல் புதிய திட்டம்

வார இறுதி தரவு மாற்றம் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு இலவச சந்தா போன்ற பிற அம்சங்களும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. 

இதற்கிடையில், 56 நாட்கள் செல்லுபடியாகும் விதமாக ரூ 399 க்கான ஒரு சிறப்பு திட்டத்தையும் Vi அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன் ​​வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றின் நன்மைகள் கிடைக்கும்.

Binge All Night, வார இறுதி தரவு மாற்றம் மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கு இலவச சந்தா ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் கூடுதலாக பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன் செய்யும் அடுத்த ரீசார்ஜில் (Mobile Recharge) ரூ .40 தள்ளுபடி கூப்பனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ALSO READ: BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு Good News, இந்த திட்டங்களில் புதிய மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News