வைரலாகும் 'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ!!

‘விஸ்வரூபம்-2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

Vijaya Lakshmi விஜயலட்சுமி | Updated: Aug 7, 2018, 12:15 PM IST
வைரலாகும் 'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ!!
YouTube (Screen Grab)

‘விஸ்வரூபம்-2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தினை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் சத்தமில்லாமல் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. 

இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன.

கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையமைக்க, மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.  

தற்போது இப்படத்தின் சண்டைக் காட்சிகள் உருவானது தொடர்பான மேக்கிங் வீடியோவை வெளியாகியுள்ளது. இந்த மேகிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 10-ஆம் நாள் திரையினை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது!