ஏன் ஹோட்டலில் இருக்கும் துண்டுகள், பெட்ஷீட்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன?

ஹோட்டல் அறைகளில் பெரும்பாலும் வெள்ளை துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இவை தூய்மை உணர்வை வெளிப்படுத்துகின்றன.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2024, 11:49 AM IST
  • வெள்ளை நிறம் அமைதியை வெளிப்படுத்துகிறது.
  • லக்ஸரி உணர்வை நமக்கு தருகிறது.
  • தூய்மையை பார்த்தவுடன் நமக்கு வெளிப்படுத்துகிறது.
ஏன் ஹோட்டலில் இருக்கும் துண்டுகள், பெட்ஷீட்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன? title=

வெள்ளை நிறம் அமைதிக்கான நிறமாக பார்க்கப்படுகிறது. மேலும், அதனை பார்த்தவுடன் ஒரு அமைதி உணர்வு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் இருக்கும் துண்டுகள் மற்றும் பெட்ஷீட்கள் சுத்தமான, கவர்ச்சியான உணர்வை நமக்கு தருகின்றன. இந்த முறை உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களில் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கூட, வெள்ளை நிற பெட்ஷீட்கள் மற்றும் துண்டுகளை பயன்படுத்துவதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் உள்ளது. சுகாதாரத் தரங்கள் முதல் ஆடம்பரமான மாயை தோற்றத்தை ஏற்படுத்துவது வரை, ஹோட்டல்களில் உள்ள வெள்ளை துண்டுகள் மற்றும் பெட்சீட்கள் அழகான உணர்வை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், நம் மனதிலும் சில தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | அவசரப்பட்டு சீக்கிரம் திருமணம் செய்தால்... வாழ்க்கையில் எக்கச்சக்க பிரச்னைகள் வரும்!

இந்தியாவில் உள்ள பிரபல ஹோட்டல்களான கௌஷாம்பி, ராடிசன் ப்ளூவிலும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. ஹோட்டல்கள் பெரும்பாலும் வெள்ளை துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களை பல காரணங்களுக்காக பயன்படுத்துகின்றன. முதலாவதாக, வெள்ளை துணிகள் பார்த்தவுடன் நமக்கு தூய்மை உணர்வை வெளிப்படுத்துகின்றன, விருந்தினர்களுக்கு உயர் தரமான சுகாதாரத்தை உறுதிப்படுத்துகின்றன. கூடுதலாக, வெள்ளை என்பது காலமற்ற மற்றும் பல்துறை வண்ணமாகும். இது எந்த ஒரு அலங்காரத் திட்டத்தையும் பூர்த்தி செய்கிறது. இந்த நிறத்தை ஹோட்டல் அறைகளில் பயன்படுத்துவதால் ஒரு ஒத்திசைவான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உறுதி செய்கிறது என்று இந்த துறை சம்பந்தப்பட்டர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

room

ஒட்டு மொத்த விருந்தினர் அனுபவத்தையும், ஹோட்டல்களில் தூய்மை பற்றிய உணர்வையும் வடிவமைப்பதில் வெள்ளை நிற துணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரலாற்று ரீதியாகவே வெள்ளை நிறமானது பல்வேறு நாகரிகங்களில் தூய்மை மற்றும் ஆடம்பரத்துடன் தொடர்புடையது. ராஜாக்கள் மற்றும் முக்கிய மந்திரிகள் வெள்ளை ஆடைகளுடன் இருக்கும் பல புகைப்படங்களை நம்மால் பார்க்க முடிகிறது. தூய்மை மற்றும் ஆடம்பரத்துடன் கூடிய இந்த கலாச்சார தொடர்பு காலப்போக்கில் இன்றும் நீடித்து வருகிறது. இது ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளில் வெள்ளை துணிகளை சுத்தமாகவும், புதியதாகவும், நேர்த்தியாகவும் உணர உதவுகிறது என்று மேலும் கூறுகின்றனர்.

மேலும், வெள்ளை நிற துணிகளில் உள்ள நன்மைகளை தாண்டி அவற்றை சுத்தமாக வைத்து இருப்பது மற்றும் பராமரிப்பதும் எளிதாகிறது. இவை ஹோட்டல்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு நல்ல வரவேற்பு மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. வெள்ளை நிறத்தின்  தன்மை அதிநவீன உணர்வை நமக்குள் பிரதிபலிக்கும். இவைதான் ஹோட்டல்களின் தரம் மற்றும் சிறப்பிற்கான இடத்தை பிரதிபலிக்கிறது. மேலும், வெள்ளை துணிகள் தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடையது. ஏனெனில் இவற்றில் கறைகள் அல்லது அழுக்கு இருந்தால் அப்படியே தெரியும். 

மேலும் படிக்க | குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News