இந்த காலத்து பெண்கள் திருமணம் செய்ய விரும்பாதது ஏன்? காரணம் இதுதான்!

Why Women Like Single Life : இந்த தலைமுறையை சேர்ந்த பல பெண்கள், தனியாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 30, 2024, 06:41 PM IST
  • பெண்கள் தனியாக இருக்க விரும்புவது ஏன்?
  • திருமணத்தை தள்ளிப்போட காரணங்கள்!
  • இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த காலத்து பெண்கள் திருமணம் செய்ய விரும்பாதது ஏன்? காரணம் இதுதான்! title=

Why Women Like Single Life : இப்போதைய இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பெரும் புலம்பல் என்னவாக இருக்கிறது தெரியுமா? ஒன்று, “எனக்கு காதலியே கிடைக்கவில்லை” என்பதும், “திருமணத்திற்கு பெண்ணே கிடைக்கவில்லை” என்பதும்தான். ஆண்கள் இப்படி ஒரு பக்கம் புலம்பினால், பெண்களோ “என்னை திருமணத்திற்கு வற்புருத்துகின்றனர், எனக்கு இதில் விருப்பமே இல்லை. சிங்கிளாக இருக்கதான் ஆசை” என்று கூறுகின்றனர். குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பெண்கள் பலர் இப்படி தங்களுக்கு வேண்டிய முடிவை தாங்களாக எடுக்க ஆரம்பித்து விட்டதால், ஆணாதிக்க எண்ணம் அதிகம் கொண்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் கொதித்தெழ ஆரம்பித்து விட்டனர். பெண்கள், சிங்கிளாக இருக்க விரும்புவதன் காரணம் என்ன தெரியுமா?

தொழில் வளர்ச்சி:

இந்த காலத்து பெண்கள், முன்னோர்கள் போல அல்லாமல் நிறைய படிக்க வேண்டும் என்றும், தன் சொந்த காலில் நின்று குடும்பத்தை அல்லது தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் நினைக்கின்றனர். அது மட்டுமன்றி, பெண்களுக்கு எப்போதும் குடும்பம்தான் முக்கியம் என்ற பிம்பம் இருந்தது. இப்போது, நாம் சொந்த காலில் நிற்பதுதான் முக்கியம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. திருமணம் அல்லது காதல் உறவுகள் அவர்களுக்கு கவன சிதறலாக இருக்கலாம். இதனால், அவர்கள் இந்த கமிட்மண்டெல்லாம் வேண்டாம் என்கின்றனர். 

நிதி சுதந்திரம்:

பெண்கள், தனது கணவனை அல்லது தந்தையை சார்ந்து இருந்து வெறுத்து விட்டனர். கையில் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்த பெண்கள், தான் யாரை சார்ந்தும் இல்லாமல், சுயமாக முழு பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்கள் திருமணத்தை தள்ளிப்போட இதுவும் ஒரு காரணம் ஆகும். 

உறவுகள் குறித்த புரிதல்கள்:

பலர், திருமணம் என்ற பெயரில் பெண்ணை கூட்டிக்கொண்டு சம்பளம் அற்ற வேலை ஆளாகவும், குழந்தை பெற்றுக்கொடுக்கும் மிஷினாக மட்டுமே கருதுவதாக பலர் கருதுகின்றனர். இதனால், பல பெண்கள் முன்னெச்சிரிகையாக திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். தன்னை, காதலி அல்லது மனைவி என்ற பெயரில் யாரும் உபயாேகித்து விடக்கூடாது என்று நினைக்கும் பெண்கள், முன்கூட்டியே இப்படி ஒரு முடிவை எடுத்து விடுகின்றனராம்.

மேலும் படிக்க | பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?

தனிப்பட்ட வளர்ச்சி:

பல பெண்கள், திருமணம் என்பதை தன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக பார்க்கின்றனர். தனக்கென்று ஒரு குடும்பம் வந்துவிட்டால், எங்கு அதை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்திலும், திருமணத்திற்கு நோ சொல்கின்றனர். அது மட்டுமல்ல, திருமணம் என்ற ஒன்று ஆகிவிட்டால், தன்னை பார்த்துக்கொள்வதோடு மட்டுமன்றி தன் கணவனை, தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வது என பெண்கள், தன்னை கோட்டைவிட்டு விடுகின்றனர். இதை, முந்தைய தலைமுறை பெண்களிடம் பார்த்த பெண்கள், இப்போது அப்படி நாம் செய்யக்கூடாது என்ற முடிவில் இருக்கின்றனர். 

விவாகரத்து குறித்த பயம்:

பெண்கள் பலருக்கு விவாகரத்து குறித்த பயம் இருக்கிறது. திருமணம் ஆனவுடன் கணவர் மாறிவிட்டால் என்ன செய்வது, காதல் இல்லமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கும் அவர்கள் திருமணத்திற்கு தடை போடுகின்றனர். 

சமத்துவம்:

இந்தியா போன்ற நாடுகளில், ஆணும் பெண்ணும் சமம் என்று வாய் வார்த்தையாக கூறுகின்றனரே தவிர, செயலில் அதை காட்டுவதில்லை. அதிலும் திருமணத்தில் ஆணுக்கு பெண் சமம் என்பதே பெரும்பாலான இல்லங்களில் இருப்பதில்லை என்பது பெண்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலை, இப்படியே பல ஆண்டுகளாக தொடர்வதால் பெண்கள் திருமணத்திற்கு ஒப்பு கொள்வதில்லை.  

மேலும் படிக்க | இந்திய பெண்களுக்கு கொரிய ஆண்களை பிடிப்பது ஏன்? காரணம் ‘இது’தான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News