டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று துபாயில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 8 மணிக்கு வந்தடைந்தது. அதில் மொத்தம் 133 பயணிகள் இருந்தனர்.
விமானம் தரையிறங்கி நிற்பதற்காக சென்றபொழுது அதன் வலதுபுற இறக்கை அருகில் நின்றிருந்த வாகனம் ஒன்றின் மீது மோதி உள்ளது. இதனால் விமானம் குலுங்கியதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Major accident averted as a jet airways aircraft wing hit a truck at #Delhi airport. pic.twitter.com/MQdSyUQmzr
— ANI (@ANI) April 8, 2018
இதுகுறித்து, ஜெட் ஏர்வேஸ் விமான அதிகாரி கூறுகையில், விமானிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புடன் வெளியேறினர். பி737 விமானம் விமான நிறுவன தொழில்நுட்ப குழுவால் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது