ஜெயிலர் படம் ஹிட் ஆக ‘இந்த’ 5 காரணங்கள் போதும்..!

Jailer Movie: ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படம் ஹிட் ஆகுமா, ஆகாதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக இப்படம் ஹிட் அடித்துவிடும் என சில சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : Aug 9, 2023, 09:49 AM IST

    ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகிறது.

    படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என நம்பப்படுகிறது.

    ரசிகர்கள் இதற்கு 5 காரணங்களை சொல்கின்றனர்.

ஜெயிலர் படம் ஹிட் ஆக ‘இந்த’ 5 காரணங்கள் போதும்..!  title=

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (ஆக., 10) உலகம் முழுவதும் வெளியாகிறது. கடைசியாக ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. தற்போது வெளியாகவுள்ள  ஜெயிலர் படம், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து வெளியாகும் ரஜினியின் படமாகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு உள்ளது. போதாக்குறைக்கு படத்தில் இந்தி முதல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் வரை பல மொழி நடிகர்கள் உள்ளனர். இதனாலும் இப்படத்தின் மீது உள்ள ஆவல் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் கடைசியில் நெகடிவ் விமர்சனங்களை சம்பாதித்ததுதான் பெரிதாக பேசப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இதே நிலை ஜெயிலருக்கும் ஏற்பட்டு விடுமோ என பயப்படுகின்றனர். ஆனால், 5 காரணங்களுக்காக ஜெயிலர் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என பேசப்படுகிறது. அவை என்னென்ன…? 

1.ரஜினிகாந்திற்கு படத்தின் மீதுள்ள நம்பிக்கை:

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படம் குறித்து எங்கு பேசினாலும் அவர் முகத்தில் நம்பிக்கையும் தைரியமும் தெரிவதாக ரசிகர்கள் சிலர் கருதுகின்றனர். அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒளிபரப்பான ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவை எடுத்துக்கொள்ளாம். இந்த விழாவில் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர், படத்தின் அனைத்து காட்சிகளையும் அவர் நேர்த்தியுடன் எடுத்து கொடுத்ததுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகளின் போதும் ரஜினிகாந்த், படம் குறித்து மகிழ்ச்சிகரமாக பேசியதாக சிலர் தெரிவித்திருந்தனர். மேலும், ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் அத்தனை பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல கோடி அளவில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

2.அனிருத் இசை:

தமிழ் திரையுலகின் ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் அனிருத். தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு இவர்தான் இசையமைத்து கொடுத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘ஹூக்கும்’ பாடலுக்கு பலர் ஃபயர் விடும் அளவிற்கு இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். அப்பாடலில் வரும் “உன் அலும்ப பாத்தவன், உங்கொப்பன் விசில கேட்டவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..” எனும் வரிகளுக்கு ரசிகர்கள் மதிமயங்கி அதையே ரிபீட் செய்து வருகின்றனர். இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்தின் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படங்களுக்கும் இசையமைத்திருந்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனால் ஜெயிலர் படத்திற்கும் அதுவே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்பு இவர் ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு எமோஜி மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு விமர்சனத்தை கொடுத்திருந்தார். அதனால் ரசிகர்கள் சிறிது நம்பிக்கையில் உள்ளனர். 

3.வில்லன் நடிகர்:

ஜெயிலர் படத்தில் பிரபல நடிகர் விநாயகன்தான் வில்லனாக வந்திருந்தார். இவர், எப்பேர்பட்ட முரட்டுத்தனமான வில்லன் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே அசால்டாக நடித்து கொடுக்க கூடியவர். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் தமிழ் திரையுலகில் உள்ளது. அதனால், கண்டிப்பாக இவருக்காகவும் படம் பார்க்க பலர் திரையரங்கிற்கு வருவர். 

4.நெல்சனின் வித்தியாசமான காமெடி:

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ‘நச்’சென்ற முத்திரையே அவரது டார்க் காமெடிதான். இவரது முதல் படமான ‘கோலமாவு கோகிலா’வில் இருந்து கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ படம் வரை அவர் இந்த காமெடியைத்தான் ஃபாலோ செய்திருப்பார். இது அவருக்கு டாக்டர் படத்திலும் கை கொடுத்தது. இதுவே ஜெயிலர் படத்திலும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், “நெல்சன் பிளாக் காமெடி எனும் விஷயத்தை படத்தில் வைத்திருக்கிறார். ஒரு சீரியஸான காட்சி வரும் போது அங்கே ஒரு காமெடி டைலாக் வருகிறது. இதனால்தான் திரையரங்கிற்கு ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என அவர் என்னிடம் கூறினார்..” என ரஜினிகாந்த் பேசியிருந்தார். 

5.படத்தில் பல சூப்பர் ஸ்டார்கள்:

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தான் ஹீரோ. ஆனால் இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் உள்ளனர். இவர்களுக்காகவும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்திற்கு வர தயாராக உள்ளனர். ‘படையப்பா’ படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த ரம்யா கிருஷ்ணன்-ரஜினிகாந்த், கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களை ஸ்கிரீனில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News