புருவப் புயல்-லுடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரபல நடிகர்!

புருவப் புயல்-லுடன் Wink Wink செல்பி எடுத்துக்கொண்ட பிரபல தமிழ் நடிகர். புகைப்படம் உள்ளே.....! 

Written by - Devaki J | Last Updated : Apr 6, 2018, 09:07 AM IST
புருவப் புயல்-லுடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரபல நடிகர்!

மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள ’மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். 

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டி விட்டவர் இவர். தற்போது இவரின் பெயரை பயண்படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். 

அவரை தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். அதனை பயன்படுத்தி பிரியா வாரியார் பணம் சம்பாதிக்க துவங்கியுள்ளார்.சில நிறுவனங்கள் விளம்பரத்திற்காக பிரியாவை அனுகியுள்ளன. 

பிரியா பிரகாஷ் வாரிய ஒரு பதிவுக்கு சுமார் 8 லட்ச ருபாய் வாங்கிக்கொண்டு ப்ரியா விளம்பரம் செய்து கொடுக்கிறாராம். இதையடுத்து பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே பாலிவுட் நடிகைகளும் அந்த பாடலுக்கு டப்பிங் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள திரையுலகை தெரிக்கவிட்ட புருவ புயல் பிரியா பிரகாஷ் வாரியார் அடுத்ததாக தமிழில் சூர்யாவுடன் ஜோடி சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தனர். 

இதை தொடர்ந்து, பிரபல நடிகர் சித்தார்த் கேரளாவில் சந்தித்துள்ளார். சித்தார்த் முதன் முறையாக மலையாளத்தில் நடித்துள்ள கம்மார சம்பவம் படத்தின் இசைவெளியீட்டுக்காக கேரளா வந்த போது தான் இவரை சிதார்த் சந்தித்துள்ளார்.

இந்த செல்பியை நடிகர் சிதார்த் Wink Wink என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இவரின் அடுத்த படத்தில் பிரியாவை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருப்பதாக சலசலப்பு எழுந்து வருகிறது.

 

 

More Stories

Trending News