)
Actor Sathyaraj About Actor Rajinikanth : தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய அளவில் டாப் நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்றும் பலரிடத்தில் பெயர் பெற்றவர் இவர். ஆனால், இவருடன் பல படங்களில் ஒன்று சேர்ந்து நடித்த சத்யராஜ், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக அவருடன் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ சண்டையோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கிடையே இருந்தது. இதனை தீர்க்கும் வகையில் சத்யராஜ் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
சத்யராஜ்-ரஜினிகாந்த் படங்கள்:
நடிகர் சத்யராஜும் ரஜினிகாந்தும், ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர். திரையுலகில் இருக்கும் வெகு சில நண்பர்களுள் இவர்களும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்து இருக்கின்றனர். குறிப்பாக, மிஸ்டர் பரத் படத்தில் இவர்களின் கூட்டணி, வெற்றிக்கூட்டணியாக அமைந்தது. இந்த படம் மட்டுமன்றி, தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், பாயும் புலி, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களும் இவர்கள் இருவருக்குமே வெற்றி படங்களாக அமைந்தன. நடிகர் சத்யராஜ், ஹீரோவாக நடித்து வந்ததை விட்டு விட்டு, அதன் பிறகு தொடர்ந்து வில்லனாகவே நடிக்க தொடங்கிவிட்டார்.
38 வருட இடைவேளைக்கு பிறகு..
சத்யராஜும் ரஜினிகாந்தும் தொடர்ந்து பல படங்களில் பணி புரிந்து வந்ததை தொடர்ந்து, திடீரென்று ஒன்றாக நடிப்பதை நிறுத்தி விட்டனர். இதற்கான காரணம் என்னவென்று பலருக்கு தெரியவில்லை. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக ஒன்றாக நடிக்கவில்லை என்பதால், ரசிகர்கள் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை என நினைத்துக்கொண்டனர். இந்த நிலையில்தான், இவர்கள் தற்போது ‘கூலி’ படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் சத்யராஜும் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் மூலமாக ரஜினியும் சத்யராஜும் 38 வருடங்கள் கழித்து இணைகின்றனர்.
கூலி படத்தில் சத்யராஜ்..
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் கூலி திரைப்படத்தில், சத்யராஜ் நடிக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் இருவரும் இணையும் இந்த தகவலை நடிகர் சத்யராஜே சில மேடை நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொண்டார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
“எனக்கும் அவருக்கும் சண்டையா?”
சத்யராஜிற்கும் ரஜினிக்கும் வெளியில் கூறப்படாத சண்டை இருப்பதாக ரசிகர்கள் நினைத்து வந்த சமயத்தில், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி அது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சத்யராஜ். இது குறித்து சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தனக்கும் ரஜினிக்கும் எந்த சண்டையும் இல்லை என்றும் இதற்கு முன்னரே இரண்டு-மூன்று முறை ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், அந்த வாய்ப்புகளை தான் பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்ததாகவும் அவர் பேசியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ