விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - யோகிபாபு நெகிழ்ச்சி

நடிகர் விஜய் தனக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் குறித்து யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 10, 2022, 12:08 PM IST
  • யோகிபாபு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்
  • விஜய்யு உள்ளிட்டோருடனும் நடித்திருக்கிறார்
  • யோகிபாபுவுக்கு விஜய் கிஃப்ட் ஒன்றை வழங்கியிருக்கிறார்
விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - யோகிபாபு நெகிழ்ச்சி title=

சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தனது அசாத்தியமான நடிப்பால் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறக்க, சந்தானம் ஹீரோவாக மாற, சூரி, சதீஷின் காமெடி பலருக்கு போர் அடிக்க நகைச்சுவைக்கான வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பினார். தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு. தொடர்ந்து காமெடியில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த மண்டேலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது.

காமெடி, ஹீரோ மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிவருகிறார் யோகி. சமீபத்தில் லவ் டுடே படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் யோகிபாபு நடிக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் விரும்புகின்றனர். யோகிபாபு நடிப்பு மட்டுமின்றி கிரிக்கெட், கால்பந்து என விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டிவருபவர். கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய வீடியோக்களை அவர் அவ்வப்போது பகிர்வது வழக்கம். அதனையும் ரசிகர்கள் வெகுவாகவே ரசித்துவருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் யோகிபாபுவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக பேட் ஒன்றை வழங்கியிருக்கிறார். விஜய் பரிசாக அளித்த பேட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த யோகிபாபு,

“இந்த பேட்டை சர்ப்ரைஸாக எனக்கு பரிசளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | ஏன் இளம் வயதிலேயே விவாகரத்து செய்தேன்? காயத்திரி ரகுராம் பதில்!

மேலும் படிக்க | Baba Re Release: படுதோல்வியடைந்த பாபா ரீ ரிலீஸ் ஏன்... நிறைவேறுமா ரஜினியின் ஆசை?

மேலும் படிக்க | Game on..வெளியான உடனே சாதனைகளை அடித்து நொறுக்கிய அஜித்தின் "சில்லா சில்லா’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News