இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல்! வைரலாகும் புகைப்படம்..

Kaajal Pasupathi: நடிகை காஜல் பசுபதி, தனக்கு இரண்டாவது திருணம் நடந்துவிட்டதாக கூறி சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Dec 26, 2023, 05:50 PM IST
  • சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவி, காஜல் பசுபதி.
  • பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்.
  • 2வது திருமணம் நடந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல்! வைரலாகும் புகைப்படம்.. title=

தமிழ் திரையுலகில் துணை நடிகையாக வலம் வருபவர், காஜல் பசுபதி. இவர், தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிரக்களிடையே வைரலாகி வருகிறது. 

காஜல் பசுபதி:

கோலிவுட்டில் பல கதாநாயகிகள் இருந்தாலும், ஒரு சில துணை நடிகைகளையும் ரசிகர்கள் கவனிக்க தவறுவதில்லை. அப்படி, ரசிகர்களின் கவனம் ஈர்த்த துணை நடிகைகளுள் ஒருவர் காஜல் பசுபதி. 2011ஆம் ஆண்டு கே.வி ஆனந்தின் இயக்கத்தில் வெளியான‘கோ’ படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். இந்த படத்தில் மட்டுமன்றி, மௌன குரு, கதம் கதம் என்ற படங்களிலும் வலுவான கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார். 

மறைந்த நடிகர் விவேக்கிற்கு மனைவியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் காமெடிகளும் மிகவும் பிரபலம். இப்படி, துணை கதாப்பாத்திரங்களில் இருந்து, காமெடி ரோல்கள் வரை எதில் நடித்தாலும் மிகவும் வலுவான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் இவர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசனில் முதல் சீசனில் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார், காஜல் பசுபதி. வைல்டு கார்டு மூலம் அப்போட்டிக்குள் நுழைந்த இவர், அந்த போட்டியின் 70வது நாளில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். 

சாண்டியின் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கலைஞர்களுள் ஒருவராக இருப்பவர், சாண்டி மாஸ்டர். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பாேட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி இவரை பல இடங்களுக்கு கொண்டு சென்றதை அடுத்து, தற்போது லியோ படத்தில் வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். சாண்டியின் உண்மையான பெயர், சந்தோஷ் குமார். இவரும், நடிகை காஜல் பசுபதியும் 2009 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை திருமண உறவில் இருந்தனர். அதன் பிறகு விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது சாண்டிக்கு டாரத்தி சில்வியா என்பவருடன் இரண்டாவதாக திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதுவரை சிங்கிளாக இருந்த காஜல் பசுபதி, தனக்கு இரண்டாவதாக திருமணமாகியுள்ளதாக ஒரு பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

காஜல்

இரண்டாவது திருமணம்? 

காஜல் பசுபதி, தற்போது புதிதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவருக்கு யாரோ தாலி கட்டுவது போன்ற காட்சி  இடம் பெற்றுள்ளது. இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு இரண்டாவதாக திருமணம் நடைப்பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், ““எனக்காக அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். திடீரென்று முடிவு செய்யப்பட்டுவிட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | பிரபாஸ்க்கு தொடரும் சோகம்! தமிழகத்தில் சலாரின் வசூல் இவ்வளவு தானா?

“பொய் தானே..” 

காஜல் வெளியிட்டுள்ள புகைப்படம், பழையதாக இருப்பதாகவும், இது நம்புவது போல இல்லை என்றும் தங்களிடம் இவர் பொய் கூறுவதாகவும் சில ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், “உங்களது கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள்” என்றும், பலர், “இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு திரைப்பட ஷூட்டிங் போல இருக்கிறது” என்றும் கமெண்ட் செய்துள்ளனர். 

 

நடிகை காஜல் பசுபதி, எது பேசினாலும் ஓபனாக பேசி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பிக்பாஸில் இருந்த போது இவர் பேசிய சில கருத்துகள் பெரிதாக பேசப்பட்டன. அதே போல, சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்தும் ஒரு ஊடக தளத்தில் பேசியிருந்தார். அதில், “பிரதீப் ரொம் உத்தமன்தான். அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தப்புதான்” என்று நக்கலாக பேசினார். இது வைரலாக மாறியது. அதே போல எப்போதாவது சில யூடியூப் சேனல்கள், “காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணமா..” என்று வீடியோக்களை வெளியிடுவதுண்டு. இது போன்ற வீடியோக்களை பார்த்து கடுப்பான காஜல் பசுபதி, தன் பாணியில் நக்கலாக இரண்டாவது திருமணமாகி விட்டது என இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | காதலியுடன் டூர் சென்றுள்ள நடிகர் விஷால்? வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News