விறுவிறு ஆக்‌ஷன்.. திரில்லிங் காட்சிகள்... அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' டீசர்

தேசிய விருது இயக்குனர், வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள அநீதி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2023, 05:39 PM IST
  • அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
  • 'அநீதி' படத்தின் டீசர் வெளியானது.
  • அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விறுவிறு ஆக்‌ஷன்.. திரில்லிங் காட்சிகள்... அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' டீசர் title=

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' படத்தின் டீசர் அப்டேட்: அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர். 2012 ஆம் ஆண்டில், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தகாரம் படப்பிடிப்பின் பின்னர், அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் நிகழ்ச்சியை வனொலி புரவலராக வழங்கினார். பின்னர் ஆக்ஸிஜன் திரைப்படத்தில் கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் . இதன் பின்னர் நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தில் முக்கிய எதிராளிக் கதாப் பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைபப்டத்தில் நடித்ததற்காகப் பரவலாக பாராட்டுக்களைப் பெற்றார், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். அத்துடன் இவர் துருவ நட்சத்திரம் திரைபப்டத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் தாஸ் தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘அநீதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 ஆம் தேதி அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது, மேலும் இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்த திரைப்படத்தில், அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார், இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் புகழ், காளி வெங்கட் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். எட்வின் சாகே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவிக்குமார் படத்தொகுப்பு செய்துள்ள இந்த திரைப்படம் திரில்லிங் சினிமாட்டிக் பயணமாக எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான இந்த திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அர்ஜூன் தாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் பெயரிடப்படாமலேயே தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘அநீதி’ எனும் படத்தின் தலைப்பு, டைட்டில் டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிரபல நடிகையின் காதல் கணவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு…!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News