Enemy movie update: எனிமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா - விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2021, 01:53 PM IST
Enemy movie update: எனிமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு title=

Vishal-Arya Enemy: பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன். இந்த படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து எனிமி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்கள்.

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி (Enemy) படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு (Vishal) ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு (Arya) ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.

ALSO READ | Sarpatta Parambarai: சார்பட்டா பரம்பரை வெளியீடு; Twitter விமர்சனம் இதோ

இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த தகவலை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். மேலும் சமீபத்தில் எனிமி படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், தற்போது எனிமி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

 

 

ALSO READ | கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை இது தான் - விஷால்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News