பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! வெளியேறும் ‘அந்த’ 2 போட்டியாளர்கள் யார்?

BB 7 Tamil Double Eviction: பிக்பாஸ் 7 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருவதை தொடர்ந்து, இந்த வாரம் இப்போட்டியில் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Nov 25, 2023, 01:37 PM IST
  • பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்காப்பட்டது.
  • இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளது.
  • யார் யார் எலிமினேட் செய்யப்பட உள்ளனர் தெரியுமா?
பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! வெளியேறும் ‘அந்த’ 2 போட்டியாளர்கள் யார்? title=

2017ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழியில் நடைப்பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை எட்டியுள்ளது. 53 நாட்களை கடந்து நடைப்பெற்று வரும் இந்த போட்டி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 7:

ஆங்கில மொழியில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை, அதே பரிமாணத்தில் இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி, இதே பெயரில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடைப்பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பித்தது. இதில் கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா ரவி, அக்ஷயா உதயகுமார், விஷ்ணு, ஜோவிகா உள்ளிட்ட பலர் களமிறங்கினர். 

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்..

சீசனுக்கு சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுப்பது விதிமுறைகளும், போட்டி முறைகளும் மாறி வருகின்றன. அந்த வகையில், இந்த சீசனிலும் புதிய முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான், டபுள் எவிக்ஷன். நடிகரும் பாடகருமான யுகேந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை வினுஷா தேவி ஆகியோர் இந்த சீசனில் முதல் டபுள் எவிக்ஷன் மூலம் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, இந்த வாரமும் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர். 

யார் அவர்கள்? 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னர் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி ஆனவர், ஆர்.ஜே.பிராவாே. போட்டிக்குள் நுழைந்த சில நாட்கள் அமைதியாக எதிலும் தலையிடாமல் இருந்த இவர், தற்போதுதான் தன் கருத்துகளை ஆங்காங்கே பதிய வைத்து வருகிறார். இவர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இருந்தார். பிறரை விட இவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால், இவர் எவிக்ட் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை போலவே, அக்ஷயாவிற்கும் வாக்குகள் குறைவாக பெறப்பட்டுள்ளதாம். அதனால் இவரும் அந்த டபுள் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்படும் நபர்களுள் ஒருவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல சீரியல் நடிகை! யார் தெரியுமா?

Bigg Boss 7 Tamil

இன்னொரு ட்விஸ்ட்..

பிராவோ, அக்ஷயாவை தவிர இன்னொரு போட்டியாளரும் எவிக்ட் செய்யப்படும் லிஸ்டில் இருக்கிறாராம். அவர் வேறு யாருமல்ல, பூர்ணிமா ரவிதான். இவர், இந்த சீசனில் பலமான போட்டியாளர்களுள் மிகவும் பலமானவராக கருதப்பட்டார். ஆனால், பிரதீப்பின் ரெட் கார்டு விஷயத்திலும், அர்ச்சனாவை ரவுண்டு கட்டி, அழவைத்த விவகார்த்திலும் இவர் மீது பலருக்கு வெறுப்பு தட்டியது. இவர், இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எப்படியோ இரண்டு வாராங்களை கடந்து விட்டார். இவரும் இந்த வாரம் எவிக்ட் ஆக வாய்ப்புகள் நிறைய உள்ளது. 

நிகழ்ச்சியில் தொடர் பூகம்பம்:

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த போதே கேப்டன்ஸி டாஸ்க் எனும் பெயரில் முதல் நாளிலேயே பாேட்டியாளர்களுக்குள் சண்டை மூட்டி விட்டனர். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் தனியாக பிரிக்கப்பட்ட ஸ்மால் பாஸ் வீடு, அவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டாருக்கும் சண்டை என சில நாட்கள் சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. இதில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. பெண்கள் இவரால் பாதுகாப்பின்மையாக உணர்கிறார்கள் என்று கூறப்பட்டு இவருக்கு ரெட் கார்டு காெடுக்கப்பட்டது. பலர் பிரதீப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்க, அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் மீது வெளியிலும் பிக்பாஸ் வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. 

பிரதீப் பிரச்சனை ஒருவழியாக ஓய்ந்து போக, விசித்ரா “என் வாழ்க்கையில் நடந்த பூகம்பம்” டாஸ்கில் பேசிய விஷயம் புயலை கிளப்பியது. இதில் அவர், தான் 22 வருடங்களாக சினிமாவிற்குள் வராத காரணத்தையும், அதற்கு ஒரு பெரிய நடிகர்தான் காரணம் என்றும் கூறினார். அவரால் தான் அனுபவித்த கொடுமைகளையும் விளக்கினார். அந்த நடிகர் யார் என்பதை அவர் கூறவில்லை என்றாலும் ரசிகர்கள் எப்படியோ அவர் யார் என கண்டுபிடித்து விட்டனர். 

மேலும் படிக்க | ‘குட் நைட்’ பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News