தமிழ் தாெலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் ஆரம்பித்தது. இந்த சீசனில் பல பரபரப்பான போட்டியாளர்கள் உள்நுழைந்தனர். இதன் முதல் நாமினேஷன் போட்டி ஆரம்பித்த இரண்டாம் நாளிலேயே நடந்தது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7:
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் போட்டி 2017ஆம் ஆண்டு தமிழில் ஆரம்பித்தது. இந்த போட்டியின் 7வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே டாஸ்குகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. களமிறங்கியிருக்கும் 18 போட்டியாளர்களில் சிலர் மக்களுக்கு பரிச்சயமான முகங்களாகவும் சிலர் சினிமா துறையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களாகவும் உள்ளனர். போட்டி ஆரம்பித்த இரண்டாம் நாள், வீட்டின் கேப்டனை ஈர்க்க தவறிய 6 பேரை ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு அனுப்பினர். இதையடுத்து இப்போட்டியை இன்னும் சூடு பிடிக்க வைக்கும் வகையில் அடுத்தடுத்த டாஸ்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் நாளே ஆப்பு..!
பொதுவாக, பிக்பாஸ் போட்டியில் ஆரம்பித்த சில வாரங்களில் டாஸ்குகள் அனைத்தும் கொஞ்சம் ஜாலியானதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த சீசனில் அது முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது. ஒரே வீடாக இருந்த பிக்பாஸ் வீடு, தற்போது இரண்டாக மாறியுள்ளது. அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் செய்யும் வீட்டு வேலைகள் தற்போது பிரிக்கப்பட்டு ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பித்த அடுத்த நாளே, பிக்பாஸ் இல்லத்தில் இருந்தவர்கள் ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தவர்களையும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தவர்களையும் நாமினேட் செய்தனர்.
நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்..
நடந்து முடிந்த நாமினேஷன் வாக்கெடுப்பில், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து அனன்யா ராவ், ரவீனா, நிக்ஸன் உள்ளிட்டோர் அதிக வாக்குகளை பெற்று நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். பிக்பாஸ் இல்லத்தில் இருந்து பிரதீப், ஜோவிகா, யுகேந்திரன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில், மக்களின் வாக்குகளை பெறாதவர்கள் யாரோ அவர்கள் கண்டிப்பாக வார இறுதியில் வெளியேற்றப்படுவர். அதற்கான நேரம் தற்போது வந்து விட்டது.
மேலும் படிக்க | பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அட ‘இந்த’ நடிகரா அது..?
வெளியேறிய நபர் யார்..?
பிக்பாஸ் இல்லத்தில் கேப்டனை மிகவும் குறைவாக கவர்ந்த நபராக கூறப்பட்டு ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட 6 பேரில் ஒருவர், அனன்யா ராவ். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளார். பிக்பாஸ் இல்லத்தில சண்டைகள் வரும் பொழுது, அதை நன்றாகவே சமாளித்தார். இவர்தான் தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விசித்ரா Vs. ஜோவிகா:
நடிகை விசித்ராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையே எழுந்த சண்டை, தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. வனிதா விஜயகுமாரின் மகள் ஜாேவிகா, வந்த முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பங்கு பெற்றுள்ள 18 போட்டியாளர்களில் மிகவும் இளமையானவர் இவர்தான். ஜோவிகா, பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு நடிப்பு துறையில் டிப்ளமோ முடித்துள்ளார். இதை அவர் பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்த முதல் நாள் கூறினார். அப்போது விசித்ரா, “பெண் பிள்ளைகள் கண்டிப்பாக 12ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அப்போதே ஜோவிகா “எனக்கு இதைப்பற்றி பேச வேண்டாம்..” என்று கூறிவிட்டார்.
சமீபத்தில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இடையே, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஜோவிகா, முதல் நாள் விசித்ரா தன்னிடம் படிப்பு குறித்து பேசியதை முன்வைத்தார். “படிக்க அவசியம்” என கூறிய விசித்ராவின் வாதமும், “படிப்பு அவசியம்தான்..ஆனால் படிப்பு மட்டுமே அவசியமில்லை..” என்ற ஜோவிகாவின் வாதமும் இறுதியில் வாக்குவாதமாக முற்றியது. இது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் இடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ