இந்த வாரம் எலிமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் இவர்களே...

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாவது போட்டியாளராக வேல்முருகன் ஆன பிறகு, பிரபலமான ஆர்.ஜே மற்றும் பாடகர் சுசித்ரா இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு நுழைவு செய்தனர்.

Last Updated : Nov 2, 2020, 06:25 PM IST
இந்த வாரம் எலிமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் இவர்களே...

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 (Bigg Boss Tamilகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாவது போட்டியாளராக வேல்முருகன் ஆன பிறகு, பிரபலமான ஆர்.ஜே மற்றும் பாடகர் சுசித்ரா இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு நுழைவு செய்தனர். ஹவுஸ்மேட்களுக்கு இமோஜிகளை ஒதுக்குவதற்கான அவரது நுழைவு பணிக்குப் பிறகு, வார இறுதி நிகழ்ச்சிக்குப் பிறகு எலிமினேஷன் நியமனப் பணி நடந்துள்ளது.

நிகழ்ச்சியின் ஐந்தாவது வாரத்திற்கான பரோமோவில், நடிகர் ஆரி மற்றும் அர்ச்சனா ஆகியோர் எலிமினேஷனில் பெரும்பாலான ஹவுஸ்மேட்களின் முக்கிய இலக்காக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆரியை பரிந்துரைத்தவர்களில் அர்ச்சனா, பாலாஜி, சிவானி, சோம், சம்யூக்தா ஆகியோர் உள்ளனர், அர்ச்சனாவை பரிந்துரைத்த ஹவுஸ்மேட்களில் அனிதா, சுசித்ரா மற்றும் ஆரி ஆகியோர் உள்ளனர்.

 

ALSO READ | Bigg Boss Tamil 4 இன்றைய பரோமோ: ஆரி , சம்யூக்தா இடையே கடும் வாக்குவாதம்...

கடந்த வாரம் முழுவதும் இருவருக்கும் முட்டிக்கொண்ட நிலையில், இருவரையும் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். புரோமோவின் இறுதியில் அர்ச்சனா சிரித்த முகத்துடன் கையெடுத்து அனைவரையும் பார்த்து வணங்குவது போன்ற காட்சி காண்பிக்கப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News