வனிதா திருமணம்... பிரபல நகைச்சுவை நடிகர் கைது...

பிரபல நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயன் வழக்கு விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் கைது செய்யப்பட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 17, 2022, 08:23 PM IST
  • நாஞ்சில் விஜயன் - யூட்யூபர் சூர்யா தேவி ஆகியோருக்கு இடையே பிரச்னை.
  • வனிதா திருமணம் குறித்து இருவருக்குள்ளும் பிரச்னை எழுந்துள்ளது.
  • சூர்யா தேவியை தாக்கியது தொடர்பாக நாஞ்சில் விஜயன் மீது வழக்கு உள்ளது.
வனிதா திருமணம்... பிரபல நகைச்சுவை நடிகர் கைது... title=

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் விஜயன் (31). இவர் பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிகம் பிரபலமானவர். இவர் பிரபல யூ-டியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்தார். 

அப்போது, 2020ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை வைத்து, நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு ஆதராவாகவும், சூர்யா தேவி வனிதாவிற்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர். 

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: எதிர்பாராததை எதிர்பாருங்கள்... எவிக்டான முக்கிய ஹவுஸ்மேட் - யார் தெரியுமா?

இதில், நாஞ்சில் விஜயனுக்கும், சூர்யா தேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  வனிதா திருமணம் தொடர்பாக வனிதா விஜயகுமாரும், சூர்யா தேவியும் சமூக வலைதளத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வெளியிட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதில் நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சூர்யா தேவி நாஞ்சில் விஜயனின் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை கட்டையால் தாக்கியதோடு மட்டுமில்லாமல் சூர்யா தேவியுடன் சென்ற மற்றொரு நபரையும்  தாக்கியுள்ளார்.

இதுகுறித்து சூர்யா தேவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகாமலும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்தார். எனவே, போலீசாருக்கு ஒத்துழைப்பு அழைக்காததால் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | அவதார் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - ஆனாலும் அந்த படத்தை முந்தவில்லை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News