2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.
இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ஜெயிச்சிட்டோம் மாறா’ 5 தேசிய விருதுகளை வென்ற சூரறைப் போற்று
சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதுபோக, தமிழின் சிறந்த படத்துக்கான விருதை வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் பெற்றது.
மேலும் படிக்க | ’யாருமே சரியில்லை’ விமர்சகர்களுக்கு தேசிய விருது கொடுக்காத ஜூரி
அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமி சந்திரமௌலி பெற்றிருக்கிறார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருது வென்றுள்ளார்.
இந்நிலையில் தேசிய விருது வென்றது தொடர்பாக இயக்குநர் வசந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கு கிடைத்ததுபோல் இருக்கிறது. சூர்யாவை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. அவருக்கு நாளை பிறந்தநாளையொட்டி இன்று இந்த பரிசு கிடைத்திருக்கிறது. மண்டேலா இயக்குநருக்கு கிடைத்ததும் மகிழ்ச்சி. 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா வென்றிருக்கிறது.
மேலும் படிக்க | சாதியுடன் சேர்ந்ததுதான் அறிவு ஆனாலும் நிம்மதி இல்லை - ரஜினியின் விரக்தி பேச்சு
பெண்களின் வலியையும்,வேதனையையும் பேசிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 தேசிய விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த விருதை எழுத்தாளர்கள் ஜெயமோகன், அசோகமித்திரன், ஆதவன் ஆகியோருக்கும் என் குருநாதர் கே. பாலசந்தருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ