என் இரவை வெளிச்சமாக்கிய எளியோரின் வாழ்த்து - நெகிழ்ந்த இயக்குனர் வசந்தபாலன்!

2010-ல் வெளியான அங்காடி தெரு படம் மாபெரும் நகரங்களில் செயல்பட்டு வரும் பெரிய பெரிய வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களை முதலாளிகள் எப்படி கொத்தடிமையை போல் நடத்துகிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2021, 10:54 AM IST
என் இரவை வெளிச்சமாக்கிய எளியோரின் வாழ்த்து - நெகிழ்ந்த இயக்குனர் வசந்தபாலன்! title=

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.  இவர் குறைந்த படங்களையே இயக்கியிருந்தாலும், அவை ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இவர் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  மேலும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது 'அங்காடி தெரு' படம் தான்.  இந்த படத்தில் மகேஸ், அஞ்சலி, இயக்குநர் வெங்கடேசு மற்றும் 'கனாக்காணும் காலங்கள்' பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். 

ALSO READ இன்று OTTயில் ரிலீசான 14 படங்களின் பட்டியல் இதோ!

2010-ல் வெளியான இந்த படம் மாபெரும் நகரங்களில் செயல்பட்டு வரும் பெரிய பெரிய வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களை முதலாளிகள் எப்படி கொத்தடிமையை போல் நடத்துகிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் படம் தான் இது.  இதில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள், அடிமைத்தனம் போன்றவற்றை துணிச்சலாக இப்படம் காட்டியது.  இந்த துன்பங்களுக்கு இடையேயும் நடக்கும் சிறு சிறு நகைச்சுவைகள், மலரும் காதல் கதைகள் என படம் ரசிகர்களை கவர்ந்தது.  இவ்வாறு சிறப்பான படைப்புகளை தமிழ் திரையுலகிற்கு தந்த இயக்குனர் வசந்த பாலன் தற்போது ஜெயில், அநீதி என்ற இரு படங்களை இயக்கி வருகிறார்.  சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இவருக்கு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

angaditheru

அதில் அவர் கூறுகையில், "நேற்றிரவு வாழைப்பழம் வாங்க ராமாபுரத்தில் உள்ள பழக்கடைக்கு ஒன்றிற்கு  சென்றேன்.  அங்கு கடைக்காரரிடம் சளி பிடிக்காத வாழைப்பழம் தாருங்கள் என்றேன்.  அவர் நீங்க இயக்குநர் தானே என்று என்னை திருநெல்வேலி வட்டார மொழியில் கேட்டார்.  பின்னர் நான் மெல்ல தயங்கி அவரிடம் ஆமாம் என்று கூறினேன்.  அதனையடுத்து அந்த வாழைப்பழத்தை என் கையில் தந்தவர் நீங்கள் வசந்தபாலன் சார் தானே என்று கேட்டார்.  முகக்கவசம் அணிந்திருந்த நான் முகக்கவசத்திற்குள்ளேயே  சிரித்த படி ஆமாம் என்று கூறினேன்.  அடுத்து அவர் என்னிடம் 'அங்காடித்தெரு என்ன' படம் சார் ?  அந்த மாதிரியே இன்னொரு படம் ஒன்னு கொடுங்க சார் என்றார்.  அதற்கு நான் 'ஜெயில்' படம் வருது என்றேன். 

 

அதனையடுத்து அவர் வருடத்திற்கு ஒரு படமாவது கொடுங்க என்றார்.  அதற்கு நான் அடுத்த வருசம் 'அநீதி' வருது என்றேன்.  அடிக்கடி கடைக்கு வாருங்கள் என்று அந்த கடைக்காரர் புன்னகையுடன் கூறினார்.  இத்தகைய எளிய மக்களின் புன்னகையும், வாழ்த்தும் என்துயை அந்த இரவையே வெளிச்சமாகியது"  என்று நெகிழ்ச்சியுடன் இயக்குனர் கூறினார்.

ALSO READ மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு 1 லட்சம் - தொடரும் ஜெய்பீம் சர்ச்சை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News