‘வேலைக்காரன்’ வெளியீடு தள்ளிபோனது. வருத்தம் தெரிவித்த படக்குழு

Last Updated : Sep 7, 2017, 08:38 PM IST
‘வேலைக்காரன்’ வெளியீடு தள்ளிபோனது. வருத்தம் தெரிவித்த படக்குழு title=

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக செப்டம்பர் 29-ம் தேதி ‘வேலைக்காரன்’  வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24AM STUDIOS தெரிவித்துள்ளது.

இதைக்குறித்து  24AM STUDIOS தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை  வெளியிட்டு உள்ளது. அதில் கூறியதாவது: ‘வேலைக்காரன்’  படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டி உள்ளது. மேலும் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள தணிக்கை குழு புதிய விதி முறை படி தணிக்கை செய்ய 3-4 வாரங்கள் ஆகிறது.

மேலும் படத்திற்கு அதிக முதலீடு செய்திருப்பதால், பண்டிகை காலத்தில் வெளியிட்டால் மட்டுமே நன்றாக இருக்கும் என முடிவு செய்து டிசம்பர் மாதம் 22-ம் தேதி வெளியிட இறுதி முடிவு எடுத்திருக்கிறோம்.

இதற்காக பார்வையாளர் மற்றும் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

Trending News